ஷாம்புவை இந்த தண்ணீரில் கலந்து தலைக்கு போட்டு குளிச்சு பாருங்க. வருட கணக்கில் வழுக்கையாகவே இருக்கும் இடத்தில் கூட, வளமாக முடி வளர தொடங்கிடும்.

hair-shampoo
- Advertisement -

வளமாக செழிப்பாக முடி வளர சூப்பரான குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஹேர்பேக் போடும் கஷ்டம் இதில் இல்லை. எண்ணெய் தடவ வேண்டிய அவசியம் கிடையாது. கஷ்டப்பட்டு பெரியதாக நீங்கள் எந்த வேலையையும் செய்யப்போவது கிடையாது. மிக மிக எளிமையான முறையில் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே உங்களுடைய தலையில் வழுக்கையாக இருக்கும் இடத்தில் கூட முடி வளர தொடங்கி விடும். முடி உதிர்வு குறைந்துவிடும். இந்த குறிப்பை பயன்படுத்திய இரண்டு மூன்று முறைகளில் நல்ல ரிசல்ட்டை பார்க்க முடியும் சரி. எளிமையான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

அரிசி வடித்த கஞ்சி நமக்கு தேவை. ஆலோவேரா ஜெல், காபித்தூள், நீங்கள் எப்போதும் தலைக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பு, தேவையான பொருட்கள் இவ்வளவுதான். முதலில் ஆலோவேரா ஜெல்லை பிரஷ்ஷாக எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது கற்றாழையில் இருந்து உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் தனியாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி வச்சிக்கோங்க.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி வடித்த கஞ்சி, இந்த ஆலுவேரா ஜெல், காபி பவுடர், இந்த மூன்று பொருட்களையும் போட்டு அடித்து கலக்க வேண்டும். ஸ்பூனில் கலக்க முடியவில்லை என்றால் எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக்கோங்க. இதோடு நீங்கள் தலைக்கு எந்த ஷாம்புவை  பயன்படுத்துகிறீர்களோ அதையும் ஊற்றி நன்றாக கலந்தால், தலைக்கு போட்டு குளிக்க வேண்டிய சூப்பரான ஹெல்தியான ஷாம்பு தயார்.

எப்போதும் போல இதை உங்களுடைய தலையில் போட்டு குளிக்க வேண்டும். தலையில் முதலில் தேங்காய் எண்ணெயை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். சிக்கு எடுத்து விடுங்கள். அதன் பின்பு இந்த ஷாம்புவை தலையில் போட்டு ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்து கசக்க வேண்டும். தலையில் இருக்கும் அழுக்குப் போவதற்கு எப்போதும் ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் நம் தலையை சுத்தம் செய்வோம் அல்லவா. அதே போல தான் லேசாக ஜென்டில் ஆக நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஷாம்புவை தலையில் போட்டு மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளித்து விட வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய தலைமுடி எப்போதும் இல்லாமல் அவ்வளவு சாஃப்ட்டாக மாறிவிடும். இந்த ஷாம்புவை முதல் முறை போட்டு குளிக்கும் போது அந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே பலவீனமாக இருக்கும் உங்களுடைய முடி வலிமை பெற்று, உதிராமல் வளரத் தொடங்கும். வழுக்கையாக இருக்கக்கூடிய இடத்தில் முடி வளர்ச்சி தூண்டப்படும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் இப்படி தலைக்கு குளித்தால் கண்டிப்பாக முடி உதிர்வதை சரி செய்யவே முடியாது! முடி உதிராமல் இருக்க எப்படி முறையாக தலைக்கு குளிக்க வேண்டும் தெரியுமா?

குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் எந்த பிராண்ட் ஷாம்பூவை பயன்படுத்தினாலும் இந்த முறையில் பயன்படுத்தும் போது பலன் நிச்சயம் இரட்டிப்பு மடங்கு கிடைக்கும்.

- Advertisement -