நீங்கள் இப்படி தலைக்கு குளித்தால் கண்டிப்பாக முடி உதிர்வதை சரி செய்யவே முடியாது! முடி உதிராமல் இருக்க எப்படி முறையாக தலைக்கு குளிக்க வேண்டும் தெரியுமா?

hair-bath-wash-fall
- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனைக்கு நாம் தலைக்கு குளிக்கும் முறையும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இது முந்தைய தலைமுறையினரை விட இன்றைய தலைமுறையினர் அதிகம் செய்யும் தவறாக இருந்து வருகிறது. தலைக்கு எப்படி குளித்தால் முடி உதிராமல் இருக்கும்? நீங்கள் தலைக்கு குளிக்கும் பொழுது செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தலைக்கு குளிக்கும் பொழுது பொதுவாக முந்தைய காலங்களில் இயற்கையான முறையில் மூலிகை பொருட்களை கொண்டு அரைக்கப்பட்ட சிகைக்காயை தான் பெருமளவு பயன்படுத்தினார்கள். இந்த சிகைக்காயுடன் வடித்த கஞ்சி தண்ணீரை சேர்த்து தலைக்கு ஜென்டில் ஆக மசாஜ் செய்து பின்னர் அலசுவர்கள். இப்படி செய்யும் பொழுது தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை ரொம்பவே ஆரோக்கியமான முறையில் வளர்ந்து வந்தது.

- Advertisement -

ஆனால் இப்போது மூன்று ரூபாய்க்கு ஷாம்பு வாங்கி இருக்கின்ற தலைமுடியையும் கொத்துக்கொத்தாக நாமே உதிர செய்து விடுகிறோம். அதுவும் ஒரே பிராண்டில் பயன்படுத்தாமல் எல்லா பிராண்டுகளையும் உபயோகித்து பார்க்கும் அறிவாளிகளாகவும் நாம் இருந்து வருகிறோம். இப்படிப்பட்டவர்கள் முதலில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். ஷாம்புவில் ஏராளமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இது தலை முடியை எந்த வகையிலும் சீர் செய்யாது. நல்ல வாசனையும், நுரையும் வந்தால் மட்டும் போதுமா? தலைமுடியை அது பாதுகாக்க வேண்டாமா?

சீயக்காய் எல்லாம் போட நேரமில்லைங்க என்று அலட்சியமாக கூறுபவர்களுக்கு ஒரே வழி தான் உண்டு. நீங்கள் ஷாம்பு போட்டு குளித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஷாம்பூவை அரை மக் அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த தண்ணீரால் தலைமுடியை ஜென்டிலாக மசாஜ் செய்யுங்கள். நீங்கள் மசாஜ் செய்யும் பொழுது எந்த காரணத்தை கொண்டும் நகத்தை ஸ்கால்ப்பு பகுதியில் வைத்து தேய்க்க கூடாது.

- Advertisement -

ஸ்கேல்பில் இந்த ரசாயனங்கள் போய் சேர்ந்து விட்டால் தலைமுடி உதிர துவங்கிவிடும். தலையில் இருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும் என்பதற்காக ரசாயன கலவை கொண்டுள்ள இந்த ஷாம்பூவை அப்படியே நிறைய எடுத்து தலை முழுவதும் தடவி நகங்களால் தேய்த்து தேய்த்து சிலர் நன்கு நுரைக்க குளித்துக் கொள்வார்கள். இப்படி செய்து உங்களுக்கு என்றாவது பொடுகு வராமல் இருந்திருக்கிறதா? அல்லது தலைமுடி உதிராமல் ஆவது இருந்திருக்கிறதா?

இதையும் படிக்கலாமே:
இந்த ரெண்டு பொருளை எப்படி யூஸ் பண்ணனும் மட்டும் தெரிஞ்சா போதும், எந்த ஃபங்ஷன் போக்கணும்னாலும் டக்குனு ரெடி ஆகிடலாம். அப்புறம் ஃபங்ஷன்ல இருக்கவங்க எல்லா பார்வையும் உங்க மேல தான் இருக்கும் அப்படி ஜொலிப்பீங்க.

ஷாம்பூவை விட சிகைக்காய் தான் பெஸ்ட் என்று நீங்கள் புரிந்து கொண்டால் இனி உங்களுடைய தலைமுடி பிரச்சனை தீர்ந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளலாம். அது போல கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்தாமல் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை மட்டும் பயன்படுத்தி வந்தாலே சிறப்புமிக்கது. மேலும் தினமும் மொழுக மொழுக தலை முழுவதும் தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. லேசாக தலை முடியை ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டால் மட்டும் போதும். ஷாம்புவை இதுபோல தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை நீங்கள் தேய்த்து, வாரம் இரண்டு முறை சாதாரணமான செக்கில் ஆட்டிய ஆர்கானிக் தேங்காய் எண்ணெயை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் சிகைக்காய் போட்டு குளியுங்கள். வேறு எதையுமே தேட வேண்டாம், உங்க முடி நல்லா தான் இருக்கும்.

- Advertisement -