இந்த ஒரு கைப்பிடி மண்ணை வைத்து பூஜை செய்பவர்களுக்கு, 48 நாட்களுக்குள் சொந்த வீடு அமையும் யோகம் வரும்.

angarakan

48 நாட்களில் சொந்த வீடு கட்டும் யோகம் எல்லோருக்கும் வந்து விட்டுமா? அதுவும் வெறும் 1 கைப்பிடி மண்ணை வைத்து! முடியும். மனது இருந்தால் நிச்சயம் மார்க்கமுண்டு. நம்பிக்கையோடு எந்த ஒரு செயலையும் தொடங்கினால் அதில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்களுக்கு வீடு கட்டும் யோகம் ஜாதக கட்டத்தில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அதை நீங்கள் உருவாக்கிக் கொள்ள 48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்தால், நீங்கள் நிலம் வாங்குவதற்காக, வீடு கட்டுவதற்காக தடைகள் இருந்தாலும், அது நீக்கும். உங்களுக்கு வரக்கூடிய வருமானம் இரட்டிப்பாக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

built-home

வீடு கட்ட தொடங்க தேவையான முயற்சிகளை நீங்கள் 48 நாட்களுக்குள் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். இந்தப் பூஜையை செய்ய ஆரம்பித்த பின்பு, உங்களுக்கு பணத்தை சேர்ப்பதில் இருந்த தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். மாத சம்பளத்துக்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகப்படியான பணம் ஈட்ட வேறு வழிகளை அந்த ஆண்டவன் நிச்சயம் காண்பித்துக் கொடுத்தார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடரலாம். நாம் எதை மனதில் ஆழமாக, நம்பிக்கையோடு நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதை அந்த ஆண்டவன் நிறைவேற்றி வைத்து விடுவார்.

முதலில் சுத்தமான இடத்தில் இருந்து ஒரு சிறிய கவரிலோ அல்லது பக்கெட்டிலோ மண்ணை எடுத்துக் கொண்டு வாருங்கள். இந்த மண்ணை கொண்டு வந்து உங்கள் வீட்டில் வைத்து, கொஞ்சமாக  மஞ்சளை தண்ணீரில் கரைத்து, அந்த மஞ்சள் தண்ணீரை, மண்ணின் மீது தெளித்து விட்டு விடுங்கள். ஏதேனும் தோஷம் இருந்தால் கூட விலகிவிடும். 48 நாட்கள் பூஜைக்கு அந்த மண்ணை தான் பயன்படுத்த போகின்றோம். தினம்தோறும் காலையில் 6 மணிக்கு முன்பாகவே, சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும்.

sand

எப்பவும் போல உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, சுவாமி படங்களுக்கு வாசனை மிகுந்த பூக்களைப் போட்டு விட்டு, தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். நீங்கள் ஒரு மணப் பலகையில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு தாம்பூலத் தட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மொத்தமாக இருக்கும் மண்ணிலிருந்து ஒரே ஒரு கைப்பிடி மண்ணை மட்டும் எடுத்து இந்தத் தாம்பூலத் தட்டில் போட்டு, அதற்கு மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி விட வேண்டும்.

- Advertisement -

தீபச் சுடரின் முன்பாக செவ்வாய்பகவானயும், முருகப் பெருமானாக நினைத்து, ‘ஓம் அங்காரகாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்‌. அந்த தீபம் முழுமையாக எரிந்து முடிந்ததும், கொஞ்சம் பெரிய அளவில், ஒரு சிகப்பு துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். தாம்புல தட்டில் இருக்கும் மண்ணை, அந்த சிகப்பு துணியில் போட்டு, ஒரு ரூபாய் காணிக்கையும் வைத்து, முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

red-cloth

48 நாட்களும் நீங்கள் பூஜை செய்த முடித்த பின்பு, ஒவ்வொரு கைப்பிடி மண்ணாக அந்த ஒரு பெரிய சிகப்பு துணியில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு ரூபாய் நாணயத்தையும் உங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக வைக்கவேண்டும். வீடு கட்டியே ஆக வேண்டும் என்ற வேண்டுதலை அந்த ஆண்டவனிடம் பக்தியோடு கேளுங்கள். பக்தியோடு அந்த முடிச்சை எடுத்து முடித்து வையுங்கள். 48 நாட்கள் நிறைவடைந்தவுடன் இந்த முடிச்சை கட்டி கைக்கு எட்டாமல் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். (ஒரே துணிக்குள், 48 கைப்பிடி அளவு மண் இருக்கும். 48 ஒரு ரூபாய் நாணயங்கள் இருக்கும்.)

sevvai

நீங்கள் சொந்த வீடு கட்டுவதற்காக, பூமி பூஜை போடும் போது, வீடு கட்டும்போது செவ்வாய் பகவானை வேண்டி, முருகப் பெருமானை வேண்டி, முடிந்து வைத்திருக்கும் மண்ணை அந்த 1 ரூபாய் நாணயத்தையும் பூமியில் முதலீடாகப் போட்டு உங்களது விட்டை கட்ட தொடங்கலாம். ஒவ்வொரு கைப்பிடி மண்ணை தாம்பூல தட்டில் வைத்து பூஜை செய்யும் போதும், ‘இந்த மண்ணை வைத்து நான் வீடு கட்டும் யோகத்தை, முருகப் பெருமானே! நீ எனக்கு தர வேண்டும்.’ என்ற கோரிக்கையை ஆழமாக வைப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை உடனே தீர இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? கடன் தீர்க்கும் 5 எளிய பரிகாரங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.