கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை உடனே தீர இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? கடன் தீர்க்கும் 5 எளிய பரிகாரங்கள்!

vilakku-cash

கடன் இல்லாத மனிதனே இல்லை. பணக்காரனுக்கும் கூட அவன் தகுதிக்கு ஏற்ப கடன் நிச்சயமாக இருக்கும். கடனே இல்லாமல் நான் வாழ்ந்து காட்டுகிறேன்! என்று நீங்கள் சவால் விட்டாலும், கிரகங்களும், விதியும் உங்களை எப்படியாவது கடன் வாங்க செய்துவிடும். அப்படி கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஏராளமானோர், பல்வேறு பரிகாரங்களை செய்து கடன் தீர வேண்டிக் கொள்கின்றனர். என்ன செய்தாலும் அவர்களுடைய கடன் மட்டும் தீர்ந்தபாடில்லை என்று புலம்புபவர்களுக்கு மிக எளிதாக செய்யக்கூடிய 5 பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.

money

கடன் தீர வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய பரிகாரம் தான் இது. நீங்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுத்திருந்தாலும், அவை திரும்ப வருவதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். மற்றவர்களுக்கு தரவேண்டிய கடன் தொகையை, நீங்கள் தர வேண்டியது இருந்தாலும் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். குல தெய்வ வழிபாடு என்பது கடன் தீர்க்க மிக மிக சிறந்த பரிகாரமாக பார்க்கப்படுகிறது. குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வத்தை முன்னிறுத்தி இந்த பரிகாரத்தை செய்யலாம்.

குலதெய்வ படம் இல்லாதவர்கள் மற்றும் குலதெய்வம் தெரியாதவர்கள் ஐந்து முக குத்து விளக்கை பூஜை அறையில் வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஐந்து முக குத்து விளக்கை மலர் கொண்டு அலங்காரம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு, குலதெய்வத்திற்கு இஷ்டமான படையல்களை உங்களால் முடிந்த அளவிற்கு செய்து படைக்கலாம். பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து மனமார கடன் தீர பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இதனை ஒன்பது பௌர்ணமிகள் செய்து பாருங்கள். நிச்சயமாக கடன் தொல்லைகள் எளிதாக தீர்ந்து விடும். கடன் நீங்க ஏதாவது ஒரு வழியை உங்களுக்கு இறைவன் காட்டுவார். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

chakrathazhvaar

பெருமாள் செல்வத்தை வாரி வழங்குபவர் என்றால், அவர் அருகில் இருக்கும் சக்கரத்தாழ்வார் கடன் இல்லாத வாழ்வை தருபவராக இருக்கின்றார். பெருமாள் கோவிலுக்கு சென்று சனி மற்றும் புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும், கடன் தீர்வதற்கு மனமுருக பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து 12 வாரங்கள் செய்தாலே கடன் எல்லாம் தீர்ந்து விடும்.

- Advertisement -

இன்று எத்தனையோ கோவில்கள் சரியாக பராமரிக்கப்படாமல், முறையான பூஜை பொருட்கள் கூட இல்லாமல் வசதியற்ற நிலையில் இருக்கின்றன. அப்படியான கோவில்களை பராமரிக்க உதவி செய்யுங்கள். மேலும் அந்த கோவில்களுக்கு உங்களால் முடிந்த பூஜை பொருட்களை வாங்கிக் கொடுங்கள். கடன் தீர பித்தளை விளக்குகள் வாங்கிக் கொடுத்தால் இன்னும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். இதுபோல் செய்தால் படிப்படியாக உங்களுடைய கடன்கள் கரைந்து விடுவதை நீங்களே பார்க்கலாம்.

kuthu-vilakku

வாங்கிய கடனில் குளிகை நேரத்தில் கொண்டு போய் கொஞ்சமாக வாங்கியவரிடம் கொடுங்கள். குளிகையில் நீங்கள் செய்யும் ஒரு செயல் திரும்பத் திரும்ப உங்களுக்கு நடைபெறும். இந்த நேரத்தில் கடனை கொடுத்தால் நிச்சயமாக திரும்ப திரும்ப பணத்தைக் கொடுத்து கடனை எப்படியாவது அடைத்து விடுவீர்கள் என்பது ஐதீகம். உங்கள் வீட்டில் பூஜை அறையில் மஞ்சள் தூள் கொண்டு ‘அக்ஷயம்’ என்று எழுதுங்கள். இதனை கடன் தீர்க்கும் வரை செய்து பாருங்கள் நிச்சயமாக வெகு விரைவாகவே கடன்கள் தீர்ந்து விடுவதை நீங்கள் பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
தங்கம் வாங்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். குலதெய்வத்திற்கு இந்த பூஜையை செய்தால் தங்கம் தானாகவே வந்து உங்கள் வீட்டில் தங்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.