நீங்க வீடுகட்ட ஆரம்மிச்சுட்டீங்கன்னா, எந்த பொருளை, எந்த நாளில் வாங்கினால் வீட்டை சீக்கிரம் கட்டி முடிக்கலாம்?

- Advertisement -

பொதுவாகவே, நிறைய பேருக்கு வீடு கட்டும் யோகம் என்பது இருக்காது. அது பரவாயில்லை. வீட்டை கட்ட ஆரம்பிக்காமலே வாடகை வீட்டில் இருப்பது நல்லது. ஆனால், சில பேர் தட்டுத்தடுமாறி வீட்டை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், அந்த வீட்டை அவர்களால் முழுமையாக கட்டி முடிக்க முடியாமல் இடையிலேயே திண்டாடுவார்கள். காரணம், பணப்பற்றாக்குறை ஏற்படும்.

built-home

சொன்ன பொருட்களை சொன்ன தேதியில் வாங்கிக் கொடுக்க முடியாது. இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து, வீடு கட்டும் வேலை தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இதற்கு என்ன காரணம்? குறிப்பாக இந்த ஒரு பொருளை இந்த நாளில் வாங்கும் பட்சத்தில் நீங்கள் கட்டும் வீட்டை எந்த ஒரு தடையும் இல்லாமல், சீக்கிரமாகவே கட்டி முடிக்கலாம் என்று சில வாஸ்து குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நம்முடைய வீட்டை கட்டி முடிப்பதற்கு மிகவும் முக்கியமானது இரும்பு பொருட்கள். இந்த இரும்பு பொருளானது, சனி பகவானுக்கு உரியது. அதாவது, வீடு கட்டுவதற்கு தேவையான கம்பிகள் வாங்குவதாக இருந்தால், நீங்கள் கட்டாயம் அதை கீழ்நோக்கு நாளாக பார்த்து தான் வாங்க வேண்டும். அதிலும், குறிப்பாக சனிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் வாங்குவது நல்ல பலனை தரும். அதிலும் அனுஷம் நட்சத்திரம், பூசம் நட்சத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில், இரும்பு கம்பிகள் வாங்கினால் நீங்கள் வீடு கட்டும் வேலை சுறுசுறுப்பாக நடக்கும். கடையில் ஆர்டர் கொடுப்பது இந்த மேற்குறிப்பிட்டுள்ள நாளில் இருக்க வேண்டும்.

home-kambi

எப்போதுமே வீட்டிற்கு தேவையான இரும்பு பொருட்களை வாங்கும்போது கடைக்காரரிடம் பேரம்பேசி விலையைக் குறைத்து வாங்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கான சரியான விலையைக் கொடுத்து வாங்குவது சிறந்தது. முடிந்தால் அந்த இரும்பிற்கான விலையை விட, ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்பது உத்தமம். பைசாவை அதிகமாகக் கொடுக்கும் பட்சத்தில் நல்லதே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஐந்து பைசா கூட பாக்கி வைக்காமல், இரும்பு பொருளை நீங்கள் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல், வீட்டிற்கு தேவையான எந்த இரும்பு பொருட்களை வாங்கினாலும், அந்த பொருட்களுக்கான காசை சரியான அளவு கொடுத்து தான் வாங்க வேண்டும். கடைக்காரரிடம் அதிகப்படியான பணத்தை கொடுத்துவிட்டு, அந்த பணத்திலிருந்து மீதம் வாங்கும் பட்சத்தில், நம் கையில் வரக்கூடிய அந்த மீதமான காசு கட்டாயம் வீண்விரயமாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்ப முடியவில்லையா? நம்பாதவர்கள் ஒருமுறை சோதித்து தான் பாருங்களேன்!

home-kambi1

இப்படியாக உங்கள் வீட்டை கட்டுவதற்கு நீங்கள் இரும்பு பொருட்கள் வாங்கும்போது சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு நாட்களே பார்க்க தெரியவில்லையா? தேய்பிறை சனிக் கிழமை அன்று சென்று இரும்பு பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். எந்த பிரச்சனையும் இருக்காது. கட்டிய வீடு பாதியிலேயே நிற்கும் பட்சத்தில் அது எவ்வளவு கஷ்டம் என்பது, அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும். உங்களுக்கும் வீடு கட்டும் பணி, பாதியிலேயே நின்று இருந்தால் ஒரு முறை இந்தக் விதிமுறைகளை பின்பற்றி இரும்பு வாங்கிப் பாருங்களேன்! நல்லது நடந்தால் சந்தோஷம்தானே!

- Advertisement -

இதையும் படிக்கலாமே
வடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு துரதிர்ஷ்டம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu shastra for house in Tamil. Veedu kattum vastu. Veedu kattum pothu seiya kudathavai. Veedu kattum sasthiram. Veedu kattum murai in Tamil.

- Advertisement -