- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வீடு என்றும் நறுமணத்துடன் இருப்பதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்.

வீடு என்றும் நறுமணத்துடன் இருப்பதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -

மழைக்காலம் வந்துவிட்டது. எங்கு திரும்பினாலும் ஈரமாக இருக்கும். அதனால் வீட்டில் ஒரு விதமான வாடை ஏற்படும். அந்த வாடையை நீக்குவதற்கும் அதே சமயம் வீடு என்றுமே நறுமணத்துடன் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நறுமணம் நிறைந்த வீட்டில் தெய்வம் குடியிருக்கும் என்று கூறுவார்கள். ஒரு சில வீடுகளுக்கு நாம் செல்லும் பொழுது அங்கு இருக்கும் நறுமணமானது நம்மை ஈர்க்கும். அங்கேயே சில நேரம் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். ஆனால் அதே சில வீடுகளில் உள்ளே நுழையும் பொழுதே ஒருவித துர்நாற்றம் வீசும். அப்பொழுது அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படாமல் விரைவிலேயே வெளியில் வந்து விடுவோம்.

- Advertisement -

பொதுவாக இந்த வாடை மழைக்காலத்தில் அனைத்து வீடுகளிலும் ஏற்படும். அவ்வாறு ஏற்படக்கூடிய அந்த வாடையை நீக்குவதற்கு எளிய வழிமுறைகளை இன்று பார்ப்போம். துணிகளில் ஈர வாடை வராமல் இருப்பதற்கு நாம் துணி அலசும் பொழுது கம்ஃபர்ட் போன்ற வாசனை பொருட்களை உபயோகப்படுத்துவோம். இந்த லிக்விடை பயன்படுத்தி நம் வீட்டையே நாம் நறுமணமாக வைத்துக் கொள்ள முடியும்.

முதலில் ஒரு லிட்டர் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு மூடி அளவிற்கு கம்பர்ட்டை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அரை லிட்டர் நீரை அதில் ஊற்றி ஸ்பிரே மூடியை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஸ்கிரீனில் இந்த நீரை ஸ்பிரே செய்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் ஒருவித நறுமணம் ஏற்படும்.

- Advertisement -

இதேபோல் மழைக்காலங்களில் அடிக்கடி கால்மிதிகளில் இருந்து ஒரு வித வாடை ஏற்படும். அந்த துர்நாற்றத்தை நீக்குவதற்கு நாம் அடிக்கடி கால்மிதிகளை மாற்றுவோம். அவ்வாறு மாற்றி துவைக்கும் பொழுது கால்மிதியை ஊற வைக்கும் தண்ணீரில் ஒரு மூடி அளவிற்கு வீடு துடைக்கும் லிக்விடை ஊற்றி ஊற வைத்து துவைத்தால் அழுக்கும் நீங்கிவிடும். கிருமிகளும் அழிந்து விடும். துர்நாற்றமும் ஏற்படாது.

மழைக்காலத்தில் கபோர்டு திறக்கும் பொழுது ஏற்படும் துர்நாற்றம் போவதற்கு ஒரு நீளமான சிறிய பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நான்கு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை போட வேண்டும். அதற்கு மேல் சாக்பீசை சிறு சிறு துண்டுகளாக போட்டு அதற்கு மேல் மெம்தலின் உருண்டைகளை போட்டு கப்போர்ட்டில் வைத்து மூடிவிட்டால் ஈரப்பதத்தை சாக்பீஸ் உறிந்து கொள்ளும். அதே சமயம் இந்த மெம்தலின் உருண்டைகளில் இருக்கும் வாசனை துர்நாற்றத்தை நீக்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் கஷ்டப்படாமல் ஈஸியா வேலையை முடிக்க எளிமையான 5 வீட்டு குறிப்பு:

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய வீட்டை என்றும் நறுமணத்துடன் வைத்துக் கொள்வோம்.

சற்று முன்