சமையலறையில் கஷ்டப்படாமல் ஈஸியா வேலையை முடிக்க எளிமையான 5 வீட்டு குறிப்பு:

beetroot
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு சமையலறையில் சில வேலைகள் ரொம்பவும் கஷ்டத்தை கொடுக்கும். அந்த வேலைகளை சுலபமாக்குவதற்கு தான் இன்று எளிமையான சின்ன சின்ன வீட்டு குறிப்புகளை தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்புகள் எல்லாம் தினம் தினம் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும் வகையில் அமையும். இதுவரை கேள்விப்படாத புத்தம் புதிய சூப்பரான வீட்டு குறிப்பு 5 இதோ உங்களுக்காக.

குறிப்பு 1
கேரட் பீட்ரூட் எல்லாம் வாங்கி வந்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருப்போம். இரண்டு மூன்று நாட்களில் அது வதங்கி போயிருக்கும். தோல் சீவி அதை வெட்டி சமைப்பதில் சிரமம் இருக்கும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக்கோங்க.

- Advertisement -

அதில் கல் உப்பு போட்டு கரைத்து விடுங்கள். இந்த உப்பு தண்ணீரில் வாடிய கேரட் பீட்ரூட்டை போட்டு, 20 அல்லது 25 நிமிடங்கள் கழித்து எடுத்தால் வாடிய பீட்ரூட் கேரட் மீண்டும் கெட்டியாக மாறிவிடும். சீக்கிரமாக தோல் சீவி வெட்டி சமைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு 2
அரிசி பருப்பு இவைகளில் மீண்டும் மீண்டும் வண்டு வந்து தொல்லை கொடுக்குதா? ஒரு வெள்ளைத் துணியில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஐந்து வர மிளகாய், ஐந்து கிராம்பு வைத்து முடிச்சாக கட்டி இதை அரிசியில் புதைத்து வைத்தால் அந்த அரிசியில் மீண்டும் மீண்டும் வண்டு வராது.

- Advertisement -

இதேபோல பிரியாணி இலை வேப்ப இலை வசம்பு இவைகளையும் அரிசி பருப்பில் போட்டு வைத்தால் வண்டு வராமல் இருக்கும். இப்படி அரிசியை பாதுகாப்பாக வைத்து விட்டு அரிசி மூட்டைக்கு மேலே, அல்லது அரிசி டப்பாவுக்கு மேல ஒரு தீ பெட்டியை வைத்து விடுங்கள். தீப்பெட்டியில் இருக்கும் சல்ஃபர் உணவு பொருட்களில் ஒரு வண்டு கூட வராமல் பாதுகாக்கும்.

குறிப்பு 3
கல் உப்பு ஜாடியில் அடிக்கடி தண்ணீர் விடுதா? ஜாடிக்கு உள்ளே இருக்கக்கூடிய உப்பை ஒரு தட்டில் கொட்டி விடுங்கள். உப்பு ஜாடிக்கு உள்ளே இருக்கும் தண்ணீரை ஒரு வெள்ளை காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்து எடுங்கள். பிறகு அதற்கு உள்ளே கான்பிளவர் மாவு அல்லது அரிசி மாவை நன்றாக தூவி விட்டு, பிறகு கல் உப்பை கொட்டி வைத்தால் உப்பிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட விடாது.

- Advertisement -

குறிப்பு 4
நிறைய பூண்டை வாங்கி ஸ்டோர் செய்து வைத்தால், அந்த பூண்டு மஞ்சள் நிறத்தில் பழுத்துப் போகும். சில பூண்டில் பூச்சி புழு கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வாங்கிய பூண்டை முதலில் ஒவ்வொரு பல்லாக பிரித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதில் கெட்டுப் போன பூண்டு இருந்தால் அதை உடனடியாக நீக்கவும். கெட்டுப் போன ஒரு பூண்டு, மற்ற பூண்டுகளையும் பூச்சி பிடிக்க வைக்கும். இந்த பூண்டில் கொஞ்சமாக கேழ்வரகு தூவி வைத்தால் சீக்கிரம் பூச்சி பிடிக்காமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல்களில் கிடைக்கும் பட்டர் நாணை அதே சுவையில் சிம்பிளா வீட்டிலும் செய்யலாம்

குறிப்பு 5
கீரை சமைக்கும்போது அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் கீரையின் பச்சை நிறமும் மாறாது. அதில் இருக்கும் சத்துக்களும் வீணாகாது. கீரையை சமைத்த பிறகு எப்போதும் இரண்டாவது முறை சூடு படுத்தி சாப்பிடக் கூடாது. அது உடம்புக்கு ஆரோக்கிய பிரச்சனையை கொடுத்து விடும்.

- Advertisement -