செவ்வாய்க்கிழமை என்றாலே அது செவ்வாய் பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். செவ்வாய் பகவான் தான் நம்முடைய சொந்த வீடு கட்டுவதற்குரிய யோகத்தை தரக்கூடியவராகவும், வீடு நிலம் தொடர்பாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவராகவும் திகழ்கிறார். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதை முருகப்பெருமான் என்றும் முருகப்பெருமானுக்கு உகந்த மாதங்களில் மிகவும் முக்கியமான மாதமாக வைகாசி மாதம் திகழ்கிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வைகாசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று செய்யக்கூடிய வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வைகாசி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று வீடு நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வீடு நிலம் பிரச்சனை தீர
பலருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும், சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல் ஒரு சிலருக்கு தங்களுடைய வீட்டில் நிலம் தொடர்பான ஏதாவது பிரச்சனைகள் இருக்கும். நிலத்தை வாங்கும் நிலையோ அல்லது விற்கும் நிலையோ ஏற்படாது. அதில் தடைகள் உண்டாகும். சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாடகைக்காரர்கள் வந்து அமைய மாட்டார்கள். இப்படி வீடு நிலம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரமாக தான் வைகாசி செவ்வாய்க்கிழமை பரிகாரம் திகழ்கிறது.
இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 9 வாரங்கள் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் கோரையில்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு ஒரு அகல் விளக்கு, கல் உப்பு, தேங்காய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் வேண்டும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை என்பது மூன்று நேரங்களில் வரும் காலை 6 மணியிலிருந்து 7 மணி மதியம் 1 மணியிலிருந்து 2 மணி இரவு 8 மணியிலிருந்து 9 மணி. இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரு பெரிய அகல் விளக்காக ஒரு அகல் விளக்கை வாங்கி அதை சுத்தம் செய்து அதற்குள் மஞ்சளை பூசி அதற்கு வெளிப்புறத்தில் ஆறு என்ற எண்ணிக்கையில் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இது உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும் எந்த இடத்தில் நாம் வைக்கிறோமோ அந்த இடத்தை விட்டு இதை நகர்த்தவோ அல்லது மாற்றவோ கூடாது. இப்பொழுது அந்த அகல் விளக்கு நிறைய கல் உப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் புதிதாக வாங்கிய நல்ல நிலையில் இருக்கக்கூடிய தேங்காயை வைக்க வேண்டும். இந்த தேங்காயை வைப்பதற்கு முன்பாக அதை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொண்டு அதை சுற்றி மஞ்சலை தடவி ஒரு பொட்டை வைத்து அந்த தேங்காயை கல்லுப்பில் நிற்பது போல் வைக்க வேண்டும்.
பிறகு இதற்கு பூவை வைத்து விடுங்கள். அகல் விளக்கின் நுனி அதாவது திரி போட்டு தீபம் ஏற்றுவோம் அல்லவா அந்த நுனியில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். தினமும் நாம் வீட்டு பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது இதற்கும் கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் பழைய ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து விட்டு புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.
பழைய நாணயங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்பது வாரங்கள் நிறைவடைந்த பிறகு இந்த ஐந்து ரூபாய் நாணயங்களை அருகில் இருக்கக்கூடிய முருகன் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். கல் உப்பு மற்றும் தேங்காயை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் செய்பவர்களுக்கு விரைவிலேயே முருகப்பெருமானின் அருளால் வீடு மற்றும் நிலம் தொடர்பான அனைத்து தடைகளும் பிரச்சனைகளும் தீரும்.
இதையும் படிக்கலாமே:வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட
சக்தி வாய்ந்த இந்த தேங்காய் பரிகாரத்தை முழுமனதோடு வைகாசி முதல் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்பவர்களுக்கு முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானின் அருளால் அவர்களுடைய வீடு நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.