வீடு சுபிட்சம் பெற பரிகாரம்

navagraha kalasam
- Advertisement -

ஒரு குடும்பத்தில் சுபிட்சம் நிலவுகிறது என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக் கூடிய அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்த குடும்பத்தில் எந்தவித குறையும் இல்லை இருக்கக் கூடாது. இதை தவிர்த்து விட்டு வீட்டிற்குள் வரும்பொழுது பல பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றாலோ அல்லது எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும் அந்த வீட்டில் ஏதாவது ஒரு கிரகத்தின் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். இந்த பாதிப்பை நீக்கவும் வீடு சுபிட்சமாக இருக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக முறையில் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் தான் செய்ய வேண்டும். இந்த மாதம் எந்த ஞாயிற்றுக்கிழமையில் செய்கிறோமோ அதே போல் அடுத்த மாதமும் அதே ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும். முதல் வாரம் என்றால் முதல் வாரம். இந்த பரிகாரத்தை சூரிய ஹோரை அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளும், மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள்ளும் செய்து விட வேண்டும்.

- Advertisement -

முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தலை வாழை இலையை வீட்டு ஹாலின் மையப் பகுதியில் விரிக்க வேண்டும். இதன் நுனி வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்பவர் கிழக்கு நோக்கியவாறு அமர வேண்டும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் நவதானியங்கள் கிடைக்கும் அதை வாங்கி ஒன்றாக சேர்ந்து கலந்து கொள்ளுங்கள். ஒரு கலச செம்பை எடுத்து நமக்கு தெரிந்த அளவிற்கு அந்த கலசத்தில் நூலை சுற்றி நவதானியத்திற்கு மேலே வைக்க வேண்டும்.

பிறகு அதில் 5 கிராம்பு, 3 சிட்டிகை மஞ்சள் தூள், 3 ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம் இவற்றை சேர்த்து செம்பின் கழுத்தை விட குறைவாக தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதற்கு மேல் மா இலைகளை வைத்து நல்ல தேங்காயாக பார்த்து ஒரு தேங்காயை வைத்து விட வேண்டும். அடுத்ததாக மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து அவருக்கு குங்குமம் வைத்து விட வேண்டும். கலசத்திற்கும் விநாயகருக்கும் நெய்வேத்தியமாக ஒவ்வொரு வெல்லக்கட்டியை வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு செவ்வரளி பூக்களே உகந்தது. உதிரியாக 108 என்ற எண்ணிக்கையில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். விநாயகர் மற்றும் கலசத்திற்கு போடுவதற்கு தனியாக மாலை ஒன்றை போட்டு விடுங்கள். பிறகு கலசத்திற்கு முன்பாக ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். இந்த விளக்கில் இரண்டு திரிகள் போட்டு ஒரு திரி கிழக்கு முகமாகவும் மற்றொரு திதி வடக்கு முகமாகவும் பார்த்தவாறு எறிய வேண்டும்.

முதலில் விநாயகப் பெருமானை மனதார நினைத்து தங்களுக்கு தெரிந்த விநாயகர் மந்திரத்தை கூறி மலர்களால் அவருக்கு அர்ச்சனை செய்துவிட்டு பிறகு கைகளில் சிறிது உதிரி பூக்களை வைத்துக்கொண்டு இந்த கலசத்தில் நவகிரக தேவதைகள் அனைவரும் வந்து அமர்ந்து என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டி அந்த கலசத்திற்கு கைகளில் இருக்கும் மலர்களை போட வேண்டும். பிறகு

- Advertisement -

“ஓம் ஹ்ரீம் ஆதித்யாய சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிய்யச்ச ராஹவே கேதவே நமஹ”

என்னும் மந்திரத்தை 108 முறை கூறி மலர்களால் கலசத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு பச்சை கற்பூரத்தை வைத்து தீபம் காட்டி வேண்டுதலை கூற வேண்டும். தீபம் முழுமையாக எரிந்து முடிந்த பிறகு கலசத்தை சிறிது வடக்கு பக்கமாக தள்ளி வைத்துவிட்டு கலசத்தில் இருக்கும் தீர்த்தத்தை நன்றாக கலந்து வீட்டில் இருக்கும் நபர்களின் தலைகளில் தெளித்து விட்டு வீடு முழுவதும் தெளிந்து கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் கலச தண்ணீரை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாழை இலை மற்றும் நவதானியங்களை எடுத்து ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும். வீட்டிற்கு வந்து நெய்வேத்தியமாக வைத்த வெல்லத்தை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும். அடுத்ததாக அன்றைய இரவு 7:00 மணி போல் கலசத்தில் இருக்கும் தேங்காயை எடுத்து வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் மூன்று முறை சுற்றி அப்படியே எடுத்துக் கொண்டு போய் முச்சந்தி இருக்கும் இடத்தில் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு உள்ளே வரவேண்டும்.

மறுநாள் காலையில் மீதம் இருக்கும் தீர்த்தத்தை குளிக்கும் நீரில் கலந்து அனைவரும் குளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டிலும் வீட்டில் இருக்கும் நபர்களின் மீதும் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி சுபிட்சமான வாழ்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: வீடு கட்டும் கனவு நினைவாக எளிய பரிகாரம்

மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த முறையில் நாம் பரிகாரம் செய்து வர கண்டிப்பான முறையில் நவகிரகங்களின் அருளால் அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம்.

- Advertisement -