வீடு துடைக்க புத்தம் புது ஐடியா

mop
- Advertisement -

பொதுவாகவே 1/2 பக்கெட் தண்ணீரில், 1 மூடி லைசாலை ஊற்றி வீடு துடைப்பது தான் இல்லத்தரசிகளுக்கு வழக்கமாக இருக்கும். வழக்கம்போல இந்த முறையில் வீடு துடைத்தால், தரையில் ஒட்டி இருக்கும் அழுக்கு போகவே போகாது. மாங்கு மாங்கு என்று இரண்டு அல்லது மூன்று முறை டயல்சைய் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

கை வலி வந்ததும், இடுப்பு வலி வந்ததும் தான் மிஞ்சும். தரை சுத்தமான பாடாக இருக்காது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இல்லத்தரசிகளுக்கு ஒரு அல்டிமேட் ஐடியா இருக்குது. அது என்ன என்பதை பயனுள்ள இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்தக் குறிப்பு ஒருமுறை முயற்சியும் செய்து பாருங்கள். ரிசல்ட் எப்படி இருக்குதுன்னு தெரியும்.

- Advertisement -

வீட்டை மாப் போட புத்தம் புது ஐடியா

இந்த குறிப்புக்கும் நாம் வழக்கம்போல தரையை துடைக்கும் லிக்விட் தான் பயன்படுத்த போகின்றோம். லைசால், நீம் ஆயில், உங்கள் வீட்டில் தரையை துடைக்க எந்த லிக்விட் பயன்படுத்துவிங்களோ, அதையே பயன்படுத்திக்கோங்க. ஒரு சின்ன காலியான வாட்டர் கேன் எடுத்துக்கோங்க.

அதில் 1 மூடி லைசால் ஊத்துங்க, 1 பெரிய சொம்பு அளவு தண்ணீரையும் அதில் ஊற்றி விடவும். இதில் 1 டேபிள் ஸ்பூன் தூள் உப்பு போட்டு, நன்றாக குளித்துக் கொள்ளுங்கள். ஒரு லிக்விட் உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இந்த வாட்டர் கேன் மேலே மூடி போட்டு சின்ன சின்ன ஓட்டைகள் போட்டுக்கணும். ஒரு ஸ்பிரே பாட்டிலும் தயாராகிவிட்டது. இப்போது நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த லிக்விடை வாட்டர் கேன்னோடு எடுத்துச் சென்று உங்களுடைய தரை முழுவதும் நன்றாக ஸ்பிரே செய்து விடுங்கள்.

- Advertisement -

அரை பக்கெட் அளவு தண்ணீரில், ஒரு மூடி லைசால் வேலை செய்வதற்கும், 1 பெரிய சொம்பு தண்ணீரில், 1 மூடி லைசால் வேலை செய்வதற்கும் நல்ல வித்தியாசம் இருக்கும். லைசாலின் பவர் உங்களுக்கு இதில் குறையாது. இப்போது தரை முழுவதும் இந்த லைசால் தண்ணீரை தெளித்து விட்டீர்கள். இந்த லைசால் தண்ணீரில் தூள் உப்பும் சேர்த்திருக்கிறோம். இது கிருமி நாசினியாகவும் செயல்படும் அல்லவா.

சரி அடுத்து என்ன செய்வது. வழக்கம் போல 1/2 பக்கெட் தண்ணீர் எடுத்துக்கோங்க. அதில் தேவைப்பட்டால் டெட்டால் ஊற்றிக் கொள்ளலாம். மாப்பை அதில் நனைத்து, பிழிந்து வீடு முழுவதும் மாப் போடுங்கள். தரையில் ஏற்கனவே லைசால் தண்ணீர் தெளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஈர மாப்பை வைத்து லேசாக துடைத்து எடுத்தாலே தரையில் இருக்கும் அழுக்கு மொத்தமும் சுலபமாக நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: பழ ஈக்கள் போக டிப்ஸ்

டைல்ஸ் பளிச் பளிச்சென்று ஆகிவிடும். அழுத்தி துடைக்கவே வேண்டாம். வழக்கம் போல தரையை மாப் போட்டு, தேவையான போது மாப்பை இந்த பக்கெட்டில் இருக்கும் தண்ணீரில் முக்கி எடுத்து மீண்டும் மாப் போடுங்கள். எப்போதும் நீங்கள் வீடு துடைப்பதற்கும் இப்படி நீங்கள் வீடு துடைப்பதற்கும் நிறைய வித்தியாசம் தெரியும். எளிமையான குறிப்பு தான். சின்ன ஐடியாவை சேர்த்து இருக்கின்றோம் இல்லத்தரசிகளுக்கு இது பயன்படும்படி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -