பழ ஈக்கள் போக டிப்ஸ்

fruit fly
- Advertisement -

எந்த காலமாக இருந்தாலும் நம் வீட்டில் பழங்களை வாங்கி வைக்கும் பொழுது அதை சுற்றி குட்டி குட்டியாக பூச்சிகள் பறக்க ஆரம்பிக்கும். ஏதாவது ஒரு பழம் சிறிது திறந்திருந்தாலும் அதன் மேல் போய் மொய்க ஆரம்பித்து விடும். அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்காக பல்லிகளும் வர ஆரம்பிக்கும். இவை அனைத்தையும் நீக்க எளிமையான டிப்ஸை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மிகவும் சிறிய அளவில் இருக்கக்கூடிய இந்த பழ ஈக்கள் பழங்களில் மொய்க்கும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதை பார்த்த பிறகு அந்த பழங்களை சாப்பிடும் எண்ணமே மனதிற்கு வரவே வராது. அதை எப்படி தான் விரட்டுவது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டு இருப்போம். இதற்காக கொசுவலைகள் போல் வாங்கி மூடி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

- Advertisement -

இருப்பினும் அந்த கொசு வலைக்கு மேல் இந்த பூச்சிகள் இருக்கும் என்பதால் எந்த நேரத்தில் நாம் வலையை திறந்தாலும் உடனே உள்ளே போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். இதை மாற்ற எளிய குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரு பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் பவுடரை போட வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை போட வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை அனைத்தும்

- Advertisement -

கரைந்த பிறகு இந்த தண்ணீரை ஒரு அட்டைப்பெட்டியில் தடவ வேண்டும். இந்த அட்டைப்பெட்டியை பழங்கள் இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் அந்த இனிப்பு சுவைக்கு பழ ஈக்கள் அனைத்தும் அந்த அட்டைப்பெட்டியில் வந்து ஒட்டிக் கொள்ளும். பழங்களில் எந்த ஈக்களும் மொய்க்கும்.

சுத்தமான கட்டி சாம்பிராணியை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மட்டும் தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நான்கு கிராம்பை போட்டு அதையும் தூள் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிது பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தூள் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பழங்கள் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். பொதுவாக பழ ஈக்கள் பழங்களில் இருந்து வரக்கூடிய வாசனையை வைத்து தான் வருகிறது.

- Advertisement -

இந்த இடத்தில் இப்படி நாம் சாம்பிராணியை போட்டு வைப்பதன் மூலம் பழங்களின் வாசனையை விட அதிகமாக சாம்பிராணி வாசனை வருவதால் பழ ஈக்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் இந்த சாம்பிராணி குறைந்தது ஆறு மாதம் வரை மனம் வரும் என்பதாலும் வீணாவதற்குரிய வாய்ப்புகள் ஏதுமில்லை என்பதாலும் இந்த குறிப்பை நாம் நம் வீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வேஸ்லின் பயனுள்ள வீட்டு குறிப்பு

இந்த எளிய குறிப்பை நாமும் நம் இல்லத்தில் பயன்படுத்தி பழ ஈக்களில் இருந்து பழங்களை காப்பாற்றிக் கொள்வோம்.

- Advertisement -