சொந்தமாக இடம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேமித்து வைத்து சொந்தமாக இடத்தையோ வீட்டையோ வாங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக வேறு வழியே இல்லாமல் தாங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டையோ நிலத்தையோ விற்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த செயல் தடைபட்டு நின்றுவிடும். அதை நீக்குவதற்கும் விரைவிலேயே வீட்டையோ நிலத்தையோ விற்பதற்கும் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வீடு நிலம் விற்க வழிபாடு
சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். இதற்கு காரணமாக நாம் கூறுவது என்ன நிலத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றாலும் நிலம் வாங்க வேண்டும் என்றாலும் செவ்வாய் பகவானின் அருள் வேண்டும். அதனால் செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவோம். இதே தான் ஒரு சொந்தமாக இருக்கக்கூடிய வீட்டையோ இடத்தையோ விற்க வேண்டும் என்றாலும் அதற்கு செவ்வாய் பகவானின் அருள் என்பது வேண்டும். அப்படி செவ்வாய் பகவானின் அருளை பெற்று சொந்தமாக வைத்திருக்கும் கூடிய வீட்டையோ நிலத்தையோ விற்பதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டை செவ்வாய் பகவானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். அருகில் எந்த கோவிலில் நவகிரகம் இருக்கிறதோ அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது வெற்றிலை பாக்கு, இரண்டு முழு தேங்காய், ஒரு கிலோ துவரம் பருப்பு, இரண்டு மண்டை வெல்லம் முழுதாக இருக்க வேண்டும். எந்த இடம் விற்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோமோ அந்த இட பத்திரத்தின் நகலை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக செவ்வாய் பகவானுக்காக சிவப்பு நிற துணியையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு செவ்வாய் ஹோரையில் நவகிரகங்கள் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய செவ்வாய் பகவானுக்கு அந்த சிவப்பு நிற துணியை கொடுத்து சாற்ற சொல்லி சிவப்பு நிற மலர்களால் செவ்வாய் பகவானுக்கு மாலை சூட்ட வேண்டும். பிறகு செவ்வாய் பகவானுக்கு முன்பாக நாம் வாங்கி வந்த தேங்காய், வெற்றிலை பாக்கு, வெல்லம், துவரம் பருப்பு இதனுடன் நாம் நகல் எடுத்து வைத்திருந்தோம் அல்லவா அந்த இடத்தின் பத்திரம் அதையும் வைக்க வேண்டும். பிறகு செவ்வாய் பகவானுக்கு முன்பாக 5 அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி செவ்வாய் பகவானை மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.
இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு நகல் பத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதம் இருக்கும் அனைத்தையும் அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய ஐயருக்கு தானமாக தரவேண்டும். அவ்வாறு தானமாக தரும் பொழுது நம்மால் இயன்ற காணிக்கையை அதில் வைத்து தானம் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாம் வழிபாடு செய்யும் பட்சத்தில் இந்த வழிபாடு நிறைவடைந்து ஒரு மாதத்திற்குள் அந்த இடத்தை விற்பதற்குரிய ஒரு நல்ல வழி பிறக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்
முழு நம்பிக்கையுடன் செவ்வாய் பகவானை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு விற்காத இடமும் விற்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.