- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீண்விரயம் ஏற்படாமல் இருக்க மகாலட்சுமி வழிபாடு

வீண்விரயம் ஏற்படாமல் இருக்க மகாலட்சுமி வழிபாடு

- Advertisement -

பணத்தை சம்பாதிப்பது எந்த அளவுக்கு கஷ்டமோ அந்த அளவிற்கு பணத்தை சேர்த்து வைப்பதும் கஷ்டமான ஒரு காரியம் தான். சேமிப்புகளை உயர்த்துவதற்கு பல வழிமுறைகளை குடும்பத்தில் இருப்பவர்களும் வேலைக்கு செல்பவர்களும் பின்பற்றுவார்கள். அந்த வழிமுறைகளை பின்பற்றினாலும் திடீரென்று எதிர்பாராத மருத்துவ செலவு, வண்டி வாகனம் பழுது பார்ப்பது, வீட்டை புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாவது இப்படி சில எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறைந்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபட்டால் வீண் செலவுகள் தடுக்கப்படும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவு ஏற்பட வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். லட்சக்கணக்கில் பணம் வருகிறது ஆனால் அவை எதுவுமே சேமிப்பாக சேரவில்லை என்னும் பட்சத்திலும் மகாலட்சுமி தாயாரின் அருள் இல்லை என்று தான் அர்த்தம். 10 ரூபாய் பணவரவு வந்தாலும் அதில் இரண்டு ரூபாய் ஆவது சேமிப்பாக சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்ட நிலைக்கு நம்மால் கொண்டு செல்ல முடியும். அதை தவிர்த்து விட்டு 10/- ரூபாய் வருமானத்தில் 12/- ரூபாய் செலவுகள் ஏற்பட்டால் கடன் சுமையால் பாதிக்கப்படுவோமே தவிர எந்தவித முன்னேற்றமும் நமக்கு ஏற்படாது. சரி இப்பொழுது இந்த வீண் செலவுகளை குறைப்பதற்கு செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர கோரையில்தான் செய்ய வேண்டும். அதாவது காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு குத்துவிளக்கு தேவைப்படும். காலையில் எப்பொழுதும் போல் வீட்டில் வழிபாடுகளை செய்து முடித்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு குத்து விளக்கை எடுத்துவைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இப்படி அலங்காரம் செய்யும் பொழுது அந்த மலர்களில் மல்லிகை பூ இருக்க வேண்டும். அடுத்ததாக 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காயை மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். கிராம்பை பூ கட்டுவது போல் கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு மாலையும் மகாலட்சுமி தாயாரை நினைத்துக் கொண்டு விளக்கில் போட வேண்டும்.

- Advertisement -

பிறகு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், உலர் திராட்சை, மாதுளம் பழம், ஐந்து நெல்லிக்கனி இவற்றை ஒரு தட்டில் வைத்து விளக்கிற்கு முன்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் தேங்காய் இவற்றையும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமியின் அஷ்டோத்திரம் அல்லது ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும்.

இப்படி மகாலட்சுமியின் மந்திரங்கள் எதுவும் தெரியாது என்னும் பட்சத்தில் “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபாடு செய்யலாம். இப்படி நாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்துவர மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து வீண்விரயம் தவிர்க்கப்பட்டு சேமிப்பு உயர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்ந்து செல்வம் சேர சஷ்டி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த குத்துவிளக்கு வழிபாட்டை மகாலட்சுமி தாயாரின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்து முழு பலனையும் பெறுவோம்.

சற்று முன்