உங்களின் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர இம்மந்திரம் துதியுங்கள்

narasimma

நாம் நமது சக மனிதர்களை பார்க்கும் போது, அவர்கள் நன்றாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவெனில் உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றில் பரவலாக அனைவரும் எதிர்கொள்வது எளிதில் கட்டி தீர்க்க முடியாத தீராத கடன் மற்றும் அதனால் ஏற்படும் இன்ன பிற கஷ்டங்கள். இவற்றையெல்லாம் தீர்க்கும் அற்புத லட்சுமி நரசிம்மர் மந்திரம் இதோ.

narasimha 3

லட்சுமி நரசிம்மர் மந்திரம்

லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே

தீய சக்திகளை ஒழிக்க திருமால் எடுத்த நான்காவது அவதாரம் நரசிம்மர் அவதாரம். அந்த லட்சுமி நரசிம்மரின் எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் மாலை வேளைகளில் உங்கள் பூஜையறையில் லட்சுமி நரசிம்மரை மனதில் நினைத்து காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் நைவேத்தியம் வைத்து, 108 முறை மந்திரத்தை உரு ஜெபிக்க வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சனைகள் சிறிது சிறிதாக தீர தொடங்கும். வாழ்வில் ஏற்படும் எத்தகைய கஷ்டங்களும் நீங்கும். திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

Narasimmar

வேத காலத்தில் அரக்கர் குல மன்னனான ஹிரண்யகசிபு மூன்று லோகங்கங்களையும் அரசனாக ஆட்சி புரிந்த போது அக்கிரமங்கள் எங்கும் தலைவிரித்தாடின. அதே நேரத்தில் அவனது மகன் பிரகலாதன் அந்த நாராயணின் பக்தனாக இருந்து, அவன் தந்தையின் துன்புறுத்தல்களுக்காளானான். எனவே பிரகலாதன் மற்றும் அனைத்து உலகங்களையும் காக்க மகாவிஷ்ணு “நரசிம்ம அவதாரம்” எடுத்து அரக்கன் ஹிரண்யகசிபுவை வதம் புரிந்தார். நரசிம்ம மூர்த்தியை லட்சுமி தேவி அமைதியாக்கி லட்சுமி நரசிம்மராக அருள்பாலித்த இந்த மந்திரத்தை படிப்பதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

இதையும் படிக்கலாமே:
ஆபத்துகளை தடுக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lakshmi narasimha mantra in Tamil. It is also called as Narasimha mantras in Tamil or Perumal manthirangal in Tamil or Kadan theera manthiram in Tamil or Kadan prachanai theera in Tamil.