வேரோடு முடி உதிர்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வெங்காயத்தை தலையில் இப்படித்தான் போட வேண்டும்.

hair12
- Advertisement -

பொதுவாக முடி உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய சக்தி வெங்காயத்தில் உள்ளது. அது சின்ன வெங்காயமாக இருந்தாலும் சரி, பெரிய வெங்காயமாக இருந்தால் சரி, வெங்காயத்தை பெரும்பாலும் நம்மில் நிறைய பேர் எண்ணெயில் போட்டு காய்ச்சி தயார் செய்து அதன் பின்பு தான், அந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துகின்றோம். எண்ணெயை சூடு செய்யும்போது வெங்காயத்தில் இருக்கக்கூடிய சத்து நமக்கு முழுமையாக கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. வெங்காயத்தை சூடு செய்யாமல் அதேசமயம் வெங்காயத்தில் இருக்கக்கூடிய சத்து அனைத்தும் தேங்காய் எண்ணெயில் இறங்கி, ஒரு சூப்பரான வெங்காய எண்ணெயை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த எண்ணெயை தயாரிப்பது என்பது மிக மிக சுலபமான ஒரு வழிதான். இப்படி எண்ணெயை தயார் செய்து தலையில் தடவி வந்தால் இரண்டே வாரத்தில் வேரோடு முடி உதிர்வதை நிறுத்த முடியும். ஒரு சிலருக்கு ரொம்பவும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். தலைமுடி பலகீனமாக இருக்கு என்றால் இன்னும் கூடுதல் நாள் இந்த எண்ணெயை பயன்படுத்தி வர நிச்சயமாக முடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

பத்து பல் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து மிகவும் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்படி தோல் உரித்து வெட்டக்கூடிய வெங்காயத்தில் ஒரு சிறு துளி கூட தண்ணீர் இருக்கக் கூடாது. ஒருவேளை நீங்கள் வெங்காயத்தை தண்ணீரில் போட்டு தோல் உரித்தால், உரித்த முழு வெங்காயத்தை ஒரு காட்டன் துணியில் நன்றாக துடைத்து அதன் பின்பு பொடியாக வெட்ட வேண்டும். தண்ணீரோடு வெங்காயத்தை வெட்டி போட்டால் தேங்காய் எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அந்த சின்ன வெங்காயம் மூழ்கும் அளவிற்கு செக்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி மூடி போட்டு இதை வெயில் படாத ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வையுங்கள். இரண்டு நாட்கள் இது அப்படியே இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து இந்த எண்ணெயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயம் ஸ்பூனை வைத்து வெங்காயத்தை அழுத்தி வடிகட்ட கூடாது.

- Advertisement -

வடிகட்டியில் இந்த எண்ணெயை ஊற்றி அப்படியே வைத்துவிட்டால், தானாக எல்லா எண்ணெயும் கீழே வடிந்துவிடும். இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்தால் இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாது. குறைந்த அளவிலேயே இந்த எண்ணெயை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 50ml தேங்காய் எண்ணெய் அளவுக்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை மயிர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து அதன் பின்பு தலைக்கு குளித்து வரவேண்டும். 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை இந்த எண்ணெய் தலையில் நன்றாக ஊறினால் போதுமானது. தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தி வர நிச்சயமாக உங்களுக்கு முடி உதிர்வில் நல்ல மாற்றம் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க. (தேங்காய் எண்ணெயில் வெங்காயம் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும் எண்ணெய் சீக்கிரத்தில் கெட்டுப் போய்விடும்.)

பின்குறிப்பு: இந்த சின்ன வெங்காயத்திற்கு பதிலாக மீடியம் சைஸில் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கியும் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ணெயில் வெங்காயத்தின் வாடை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இதில் வாசத்திற்காக ஏதாவது முடி வளர்ச்சியை தரும் எசன்சியல் ஆயில் சேர்த்துக் கொள்வதாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -