ஒருவர் வீட்டில் இந்த நட்சத்திரத்தில் மட்டும் இறப்பு சம்பவம் ஏற்படவே கூடாது. அப்படி நடந்தால் அந்த குடும்பத்திற்கு தீராத துன்பங்களும் துயரங்களும் தொடர்ந்து வரும்.

deepam
- Advertisement -

பிறப்பு இறப்பு என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட கூடிய ஒரு விஷயம் தான். யார் இந்த பூமியில் எப்போது அவதரிக்க வேண்டும் என்பதையும், எந்த உயிர் எந்த நேரத்தில் இந்த பூமியை விட்டு பிரிய வேண்டும் என்பதையும் நிர்ணயிப்பது அந்த இறைவன். இருப்பினும் ஜோதிட சாஸ்திரப்படி சில நட்சத்திரங்களில் வீட்டில் இறப்பு நிகழக் கூடாது என்று சொல்லி வைத்துள்ளது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்படக் கூடாத நட்சத்திரங்கள் எவை. ஒரு வேலை இந்த நட்சத்திரத்தில் வீட்டில் இறப்பு ஏற்பட்டு விட்டால் அதன் மூலம் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னென்ன, இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிய சில விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஒருவர் உங்கள் வீட்டில் இறந்த பிறகு தான் உங்கள் வீட்டில் தொடர் கஷ்டம் வந்து கொண்டிருக்கிறதா. அப்போது கட்டாயமாக நீங்கள் அந்த நபர் இறந்த நேரத்தை ஜோதிடரிடம் சொல்லி அதற்கான பரிகாரத்தை தேடிக் கொள்ள வேண்டும். ஒரு உயிர் இந்த பூமியில் அவதரிப்பதற்கு தான் நல்ல நேரம் தேவைப்படும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி கிடையாது. ஒரு உயிர் இந்த பூமியை விட்டு பிரிவதும் நல்ல நேரத்தில் தான் இருக்க வேண்டும். (சில வீடுகளில் சில உயிர் பிரிந்த பின்பு அந்த குடும்பத்தால் தலை தூக்கவே முடியாது. அதன் பின்பு அடி மேல் அடி வாங்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்காது. திருமணம் நடந்தால் குழந்தை பிறக்காது. எதிர்பாராத விபத்துக்கள். மீண்டும் மீண்டும் எதிர்பாராத உயிர் இழப்புகள் வரும்.)

- Advertisement -

குறிப்பாக அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, உத்திரம், மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், இந்த நட்சத்திரங்களில் உங்களுடைய வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அது உங்களுக்கு சில பல கஷ்டங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்கிறது ஜோதிடம். அதற்காக பயப்பட வேண்டாம்‌. 27 நட்சத்திரங்களில் இந்த நட்சத்திரங்களில் எல்லாம் பூமியிலிருந்து உயிர் பிரியவே கூடாது என்றால் அது இயற்கைக்கு எதிரானதாகிவிடும். இந்த நட்சத்திரத்திலும் பூமியில் இறப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அதன் மூலம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் என்ன செய்வது. அந்த காலத்தில் எல்லாம் ஒருவர் இறந்த நேரம் அந்த வீட்டிற்கு சரியில்லை என்று ஜோதிடர் சொல்லிவிட்டால், அந்த வீட்டை 6 மாதங்கள் வரை திறக்காமல் பூட்டி வைப்பார்களாம். அந்த விஷயம் எல்லாம் இன்று சாத்தியம் கிடையாது. ஆகவே அதற்கு உண்டான பரிகாரத்தை நாம் பார்த்து விடுவோம். ஒரு வேலை உங்களுடைய வீட்டில் இருந்தவருடைய உயிர் பிரிந்த நேரம் சரியில்லை என்று ஜோதிடர் சொல்லிவிட்டார் அவர் ஏதாவது ஒரு பரிகாரம் சொன்னால் அதை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -

பரிகாரத்திற்கு நிறைய பணம் செலவாகிறது. எங்களால் ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை செய்ய முடியவில்லை எனும் பட்சத்தில், தினம் தோறும் உங்கள் வீட்டிற்கு வெளியில் இந்த விளக்கை ஏற்றங்கள். வெண்கலத்தில் புதியதாக ஒரு விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை வைத்து விடுங்கள். ஆறு மாதம் தொடர்ந்து இந்த விளக்கை வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் ஏற்றுங்கள் வீட்டிற்கு உள்ளே இந்த விளக்கை ஏற்றக்கூடாது. நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் உள்ள இடத்தில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

தினமும் இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு செல்லுங்கள். இரவு அந்த விளக்கு எவ்வளவு மணி நேரம் எரிகிறதோ எரிந்து தானாக அனையட்டும். (ஆறு மாதம் தொடர்ந்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும். ஏற்றிய இந்த விளக்கை மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வந்து மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஆறு மாதங்கள் கழித்து அப்படியே அதை கடையில் கொடுத்து மாற்றி விடுங்கள்.)

எங்கள் வீட்டில் மரணம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எங்கள் வீட்டிலும் கஷ்டங்கள் விடாமல் துரத்துகிறது என்பவர்கள் என்ன செய்வது. மேலே சொன்ன பரிகார விளக்கை உயிர் பிரிந்த முதல் ஆறு மாதம் தான் ஏற்ற வேண்டும். நீங்கள் ஒரு வெண்கல பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தானம் மட்டும் கொடுத்து விடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய குடும்ப பிரச்சனை படிப்படியாக குறையும். நன்றாக உங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் சொல்லி உங்களுடைய வீட்டில் இறந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய ஒரு ஹோமம் செய்து கொள்வது மேலும் சிறப்பான பலனை தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -