சமையலறையில் உங்கள் வீட்டு அரிசி மூட்டையில் எப்போதுமே இந்த 2 பொருள் இருக்கட்டும். என்றென்றும் உங்களுக்கு அளவில்லா ஐஸ்வரியம் கிடைக்கும்.

rice-arisi-alavai
- Advertisement -

நம்முடைய ஒவ்வொருவர் வீட்டிலும் இந்த அரிசி நிச்சயம் இருக்கும். அளவு என்பது அவரவர் வருமானத்தை பொறுத்து, வீட்டில் இருக்கும் உறுப்பினர்களை பொருத்து ஐந்து கிலோ, பத்து கிலோ, ஒரு மூட்டை, 25 கிலோ என்று அந்த அரிசியை வாங்கி வீட்டில் ஸ்டோர் செய்து வைப்போம். அரிசி என்றதுமே நம்முடைய இந்து சாஸ்திரப்படி அது அன்ன லட்சுமியாக பார்க்கப்படக்கூடிய ஒரு உணவுப் பொருள். அந்த அன்னலட்சுமி வீட்டில் நிறைவாக இருந்தால் மட்டும்தான் மற்ற ஐஸ்வரியங்கள் நம்முடைய வீடு தேடி வரும்.

இன்னொரு காரணம், நம்முடைய பசியை போக்கக்கூடிய ஒரு பிரதான பொருள் இது. இப்படி பலவகையான அருமை பெருமைகளைக் கொண்ட இந்த அன்னலட்சுமி ஸ்வரூபமான அரிசியை, நம் வீட்டு சமையல் அறையில் எப்படி வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், அந்த அரிசியோடு நாம் வைக்க வேண்டிய அந்த 2 பொருள் என்ன என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சமையலறையில் அரிசி வைக்கும் முறை:
எப்போதுமே அரிசி சமையலறை மேடைக்கு கீழ்ப்பக்கத்தில் தான் இருக்க வேண்டும். அரிசியை தலை நிமிர்ந்து மேலே இருந்து டப்பாவில் இருந்து எடுக்கக் கூடாது. தலை குனிந்து கீழே இருக்கக்கூடிய அரிசியை தான் எடுக்க வேண்டும். அதுபோல அரிசியை அளப்பதற்கு பயன்படுத்தும் ஆழாக்கு, அரிசியை புடைத்து சுத்தம் செய்யக்கூடிய முறம், இந்த இரண்டு பொருட்களுமே எப்போதும் அரிசியில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் படிக்கணக்கில் சாப்பாடு வடிப்பவர்களாக இருந்தால் அந்த அறை படி, கால் படி கூட எப்போதும் அரிசி மூட்டையில் போட்டு வையுங்கள்.

இப்படி அரிசியை அளப்பதற்கு பிளாஸ்டிக்கில் டம்ளர் வைத்துக் கொள்ள வேண்டாம். பித்தளையில் இருக்கக்கூடிய ஆழாக்கை பயன்படுத்துவது ரொம்ப நல்லது. வீட்டில் எப்போதும் முறம் இரண்டு என்ற கணக்கில் தான் இருக்க வேண்டும். ஒருமுறம் இருக்கக்கூடாது. பிளாஸ்டிக் முறம் இருக்கக் கூடாது. நாம் பயன்படுத்தும் முறத்தை அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

ஒவ்வொரு முறை அரிசியை அந்த படியில் அளந்து சாப்பாட்டுக்கு எடுக்கும்போதும் அன்னலட்சுமியை மனதில் வணங்கி விட்டு தான் எடுக்க வேண்டும். ஒரு அரிசி விளைய வைக்க விவசாயின் பாடு என்ன, இந்த சாப்பாட்டை நாம் வீணாக்கக்கூடாது என்றும், சமைக்கும் உணவு எல்லோருடைய பசியையும் சரியாக போக்க வேண்டும் என்றும், சொல்லி அந்த அரிசியை அளந்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதாவது சமையலுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

சாதத்தை அனாவசியமாக வீணாக்காதீர்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாடத்தை சொல்லிக் கொடுங்கள். தேவையான அளவு சாதத்தை தான் தட்டில் போடணும். கீழே சிந்தாமல் சாப்பிடணும். சாப்பாட்டை தட்டில் மிச்சம் வைத்து குப்பையில் போடக்கூடாது என்ற பாடம் குழந்தைகளுடைய மனதிலும் ஆழ பதிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: முருகருக்கு இதுதான் ரொம்ப ரொம்ப பிடிக்குமா? இருண்டு போன உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முருகனை நினைத்து வெறும் 48 நாட்கள் இந்த பூஜையை மட்டும் செய்தால் போதும்.

இப்படி எந்த வீட்டில் அரிசிக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை கொடுத்து, அன்னலட்சுமியை வீணாக்காமல் பத்திரமாக பாதுகாத்து, உணவு சமைத்து சாப்பிட்டு வருகிறார்களோ, நிச்சயமாக அந்த குடும்பத்தில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. படிப்படியாக அந்தக் குடும்பம் செல்வ செழிப்பில் உயர்ந்து கொண்டே இருக்கும். இது நிதர்சனமான உண்மை. அலட்சியமாக யார் ஒருவர் அரிசியை கையாள்கிறார்களோ அவர்களுடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நான் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -