வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக அடி மேல் அடி விழுகிறது. கஷ்டங்களில் இருந்து மீள முடியவில்லை! இறை வழிபாடும் செய்யமுடியவில்லை. இதற்கான காரணமும், தீர்வும் உங்களுக்காக.

durgai-amman

சில பேர் வீடுகளில் எதிர்பாராத சமயத்தில், அடிமேல் அடி, கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். தீராத கஷ்டத்திலிருந்து மீண்டு வந்து சில நாட்கள் கூட ஆகி இருக்காது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கஷ்டங்கள் அந்த குடும்பத்தை வாட்டி வதைக்கும். அந்த வீட்டில் வசிப்பவர்களால் மூச்சைக் கூட நிம்மதியாக விட முடியாது. சரி, இவ்வளவு கஷ்டங்கள் வருகின்றதே வீட்டில் இறை வழிபாடு ஏதாவது செய்வோம். பூஜை புனஸ்காரங்கள், ஹோமங்கள் நடத்துவோம் என்று நினைத்தால் அதற்கான வழியும் கிடைக்காது. இறைவழிபாட்டை தடுக்கும் வகையில் வீட்டில் ஏதேனும் அசுப காரியங்கள் நடந்து விடும். கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். வீட்டில் தீபம் ஏற்றி கூட இறைவழிபாடு செய்ய முடியாத அளவிற்கு பல பிரச்சினைகள் வந்து சூழ்ந்திருக்கும்.

durga

நேரம் சரியில்லை எனும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையில் இப்படி பல கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த கஷ்டத்தில் இருந்து மீள வேண்டும் என்றால், வீட்டில் இருந்தபடியே செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில், துர்க்கை அம்மனை வழிபாடு செய்யவேண்டும். தீர்க்க முடியாத கடுமையான இன்னல்களை கூட சீக்கிரமே சரி செய்யக் கூடிய சக்தி இந்த துர்க்கை அம்மனுக்கு உண்டு.

அடுத்தபடியாக வீட்டில் கெட்ட சக்தி ஆதிகம் இருந்தால் கூட, நிச்சயமாக அந்த வீட்டில் இறைசக்தி குடியிருக்காது. அந்த வீட்டில் இறை வழிபாட்டினை செய்ய முடியாது. தொடர்ந்து பல கஷ்டங்கள் அந்த குடும்பத்திற்கு வந்து கொண்டே தான் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வீட்டில் செய்வினை, பில்லி, சூனியம் பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்ள உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான ஜோதிடர்களிடம் உங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய் காண்பிக்கலாம். அப்படி இல்லை உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை உள்ளதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுடைய வீட்டில் கெட்ட சக்தி குடியிருப்பதாக உணர்ந்தால், உங்களுக்கு யாரேனும் செய்வினை செய்துள்ளார்கள் என்பதை நீங்களே அறிந்தால், உங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

உங்களுடைய வீட்டில் வாயு மூலை என்று சொல்லப்படும் வடமேற்கு மூலையில் ஒரு மண் அகல் தீபம் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு நிற திரிபோட்டு, இந்த விளக்கை, மேற்கு பார்த்த வாறு ஏற்றி வைத்து விட்டு, துர்க்கை அம்மனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

deepam

உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றக் கூடிய சூழ்நிலை இல்லை என்றாலும் பரவாயில்லை, வடமேற்கு மூலையில் உங்கள் வீட்டிற்குள் இந்த தீபம் தாராளமாக ஏற்றப்படலாம். உங்களுக்குள் இருக்கக்கூடிய கஷ்டங்கள் உங்களை விட்டு விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து 11 வாரம் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றி வரும் பட்சத்தில் நிச்சயமாக வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.