வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்து நிற்க, சண்டை சச்சரவுகள் நீங்க, இந்த ஆன்மீக குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு சரியாக பின்பற்றி பயன் பெறுங்கள்

fight-meenatchi
- Advertisement -

ஒரு வீடு என்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழக்கூடிய ஒரு இடமாகும். ஆனால் இங்கு கணவன் மனைவியிடையே சண்டை, மாமியார் மருமகளுக்கிடையிலான சண்டை, குழந்தைகள் பெற்றோர்களுக்கிடையான சண்டை என மாறிமாறி சண்டைகள் வந்து கொண்டிருந்தால், அந்த இல்லத்தில் மகிழ்ச்சி என்பது இருக்காது. இவ்வாறு காரணமே இல்லாமல் சண்டைகள் வருவதற்கு கண் திருஷ்டியும் கூட ஒரு காரணமாக அமையலாம். அவ்வாறு வீட்டிற்குள் வரும் தீய பார்வைகளை வெளியில் அகற்ற இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி பாருங்கள். உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் தெய்வீக அருளால் விரட்டியடிக்கப்படும். வாருங்கள் அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டால், என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

- Advertisement -

பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக கூடாது. ஒவ்வொரு தெய்வச்சிலைக்கும் இடையில் போதிய இடத்தை விட்டு வைக்க வேண்டும். நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி வீட்டில் தங்க மாட்டாள். பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும். செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

- Advertisement -

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

- Advertisement -