இந்தப் பொருட்களை உங்களுடைய வீட்டில், இப்படி வைத்தால் சுபிட்சம் பொங்கி வழியும். லட்சுமி கடாட்சம் போதும் போதும் என்ற அளவிற்கு நிறைவாக கிடைக்கும்.

mahalashmi

பணம் காசை வைத்துக்கொண்டு, பெரிய பணக்காரர்களாக வாழ்வது என்பது வேறு! லட்சுமி கடாட்சத்துடன் சுபிட்சமாக நிறைவான வாழ்க்கையை வாழ்வது என்பது வேறு! சில பேருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரும். லட்சுமி கடாட்சம் என்றாலே பணம் தானே, அப்படி என்று! அப்படி கிடையாது. சில வீடுகளில் தேவைக்கு ஏற்ப, வறுமை இல்லாமல் பணம் இருக்கும் பட்சத்திலும், அந்த வீட்டில் லட்சுமி கடாட்சமும் சுபீட்சமும் நிறைந்த வீடாகத் தான் இருக்கும். கோடி கோடியாக பணம் இருந்தாலும், அந்த இடத்தில் சில இடங்களில் லட்சுமி கடாட்சமும் சுபீட்சமும் இருக்காது.

mahalakshmi2

சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் இருக்கும் இடத்தில் இந்த சுபிட்சத்தை நம்மால் நிலை நிறுத்த முடியாது. ஆக, ஒரு வீட்டில் சுபிட்சம் நிறைவாக இருக்க வேண்டும், லட்சுமி கடாட்ஷம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம், என்பதைப் பற்றிய சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பெரிய பெரிய பரிகாரங்களை பூஜைகளை எல்லாம் செய்யப்போவது கிடையாது. ஆன்மீக ரீதியாக சில விஷயங்களை, பின் சொல்லப்பட்டுள்ளதில், உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தை, உங்களுடைய வீட்டிலும் நீங்கள் செய்து கொள்ளலாம். அவ்வளவு தான்.

komatha-tm

பூஜை அறையில் தீபம் ஏற்றும் போதும், ஊதுவத்தி ஏற்றும் போதும் சாம்பிராணி தூபம் ஏற்றும்போது அதை பூஜை அறையில் மட்டும் வைக்காமல், முடிந்தவரை ஒரு ஊதுவத்தியை நில வாசப்படியில், வரவேற்பறையில் வைப்பது வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும்.

- Advertisement -

வீட்டிற்குள் நுழைந்த உடன் வீட்டிற்குள் நுழைபவர்கள் கண்களுக்குப் படும்படியாக பசுமாடும் கன்றும் சேர்ந்த புகைப்படம் அல்லது சிலை இருப்பது மிகவும் நல்லது. இதேபோல் வரவேற்பறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட சங்கு வைப்பது வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும்.

veenai

உங்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான வசதி இருந்தால், இசை சம்பந்தப்பட்ட பொருட்களை வாசிக்க தெரிந்தாலும் சரி, வாசிக்கத் தெரியவில்லை என்றாலும் சரி, வீணை, தபேலா, ஆர்மோனிய பெட்டி இப்படிப்பட்ட விஷயங்களை வாங்கி வரவேற்பறையில் வைக்கலாம். வசதியுள்ளவர்கள் உண்மையிலேயே இந்த பொருட்களை வாங்கி வைப்பது தவறு கிடையாது. வீட்டில் இன்னும் வசதி பெருகத்தான் செய்யும்.

veenai1

வசதி குறைந்தவர்கள் இப்படிப்பட்ட பொம்மைகளையாவது வீட்டின் வரவேற்பறையில் வாங்கி வைத்துக் கொண்டால் நிச்சயமாக நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்படும். இதெல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட ஒரு கைப்பிடி அளவு ஏலக்காயை வாங்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் நிரப்பி, மூடி போட்டு வரவேற்பறையில், எல்லோர் கண்களுக்கும் தெரியும்படி வைக்க வேண்டும்.

ஐந்து அல்லது பத்து ஏலக்காய்களை வைப்பதை விட, ஒரு கண்ணாடி பாட்டில், சிறிய அளவில் இருந்தாலும் அது நிரம்ப ஏலக்காய் இருக்க வேண்டும். இது வீட்டிற்கு மேலும் மேலும் சுபிட்சத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. முயற்சி செய்து பாருங்கள் உங்களுடைய வீடு சுபிட்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் இருந்தால், இப்படிப்பட்ட பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்கி வைத்தாலும் நல்ல வித்தியாசத்தை உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் உப்பு ஜாடி பக்கத்தில் இந்த செடியை வைத்தால் 3 மாதத்தில் உங்களுக்கு இருக்கும் எல்லா கடனும் அடைந்துவிடுமாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.