சமையலறையில் உப்பு ஜாடி பக்கத்தில் இந்த செடியை வைத்தால் 3 மாதத்தில் உங்களுக்கு இருக்கும் எல்லா கடனும் அடைந்துவிடுமாம்!

money-plant-salt-jar

தீராத கடன் பிரச்சனை தீர்வதற்கு சுலபமான பரிகாரங்கள் எவ்வளவு இருந்தாலும் கடன் மட்டும் தீர்ந்தபாடில்லை என்பவர்களுக்கு நம்பவே முடியாத இந்த ஒரு பரிகாரம் நல்ல ஒரு தீர்வை தரும். சமையலறையில் புழங்கும் பெண்கள் நிறைய விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் கடன் பிரச்சனை அவர்களுக்கு இருந்தால் போதும், சரியாக சாப்பிடவும் மாட்டார்கள், தூங்கவும் செய்ய மாட்டார்கள். அவர்கள் சமைக்கும் சமையலிலும் ருசி இல்லாமல் போய்விடும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை பெற அனுதினமும் போராடிக் கொண்டிருப்பவர்கள் இதையும் முயற்சி செய்து பார்க்கலாம். என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம்.

gas-stove

சமையலறையை சுத்தம் செய்து நன்கு துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சமையல் மேடையில் இருக்கும் அடுப்பை நன்கு சுத்தமான முறையில் பராமரித்து வர வேண்டியது அவசியமாகும். சுத்தமான அடுப்பை பார்க்கும் பொழுது தான் பெண்களுக்கு நல்ல உணவை தர வேண்டும் என்கிற எண்ணமும் இயற்கையாகவே எழும். கடன் பிரச்சினை இருப்பவர்கள் அதனை தீர்ப்பதற்கு முதலில் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் தேவைக்கு மீறிய வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை தேட வேண்டும்.

சமையலறையில் அடுப்பைப் பார்த்து நின்று கொள்ளுங்கள். உங்களுடைய வலது கை பக்கமாக ஒரு மூலை இருக்கும் அல்லவா? அந்த இடத்தில் தான் நீங்கள் உப்பு ஜாடியை வைக்க வேண்டும். உப்பை எப்பொழுதும் பீங்கான் ஜாடியில் வைப்பது மிகவும் நல்லது. எவர்சில்வர் பாத்திரத்தில் உப்பை வைத்தால் பாத்திரம் விரைவாகவே துருப்பிடித்து விடும் ஆபத்து உள்ளது. பிளாஸ்டிக்கை தவிர்த்து பீங்கான் ஜாடியை வாங்கி வைத்து அதில் வெள்ளிக்கிழமை தோறும் உப்பை நிறைந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாரம் முழுவதும் பயன்படுத்தும் பொழுது கொஞ்சமாக குறைந்து இருக்கும் அல்லவா? அப்படி குறையவே விடக்கூடாது! வெள்ளிக்கிழமையில் மீண்டும் அதனை நிரப்பி முழுமை செய்து கொள்ளுங்கள்.

uppu jaadi

மகாலட்சுமி வாசம் செய்யும் இந்த உப்பு ஜாடிக்கு பக்கத்தில் இந்தச் செடியை வைப்பதால் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. ஒரு சுத்தமான கண்ணாடி குடுவை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாட்டிலாக இருந்தாலும் சரி தான், குவளையாக இருந்தாலும் சரி தான். ஆனால் கண்ணாடியாக இருப்பது நல்லது. எந்த ஒரு ஸ்டிக்கர்களும் அதில் ஒட்டி இருக்கக் கூடாது. உள்ளே இருக்கும் பொருள் வெளியே நன்கு தெரிய வேண்டும். அந்த அளவிற்கு நல்ல கண்ணாடியாக பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் பாதி அளவிற்கு தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய செடியாக இருக்கும் மணி பிளான்ட் வகைச் செடிகளை எதுவாயினும் தேர்வு செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வைக்க இருக்கும் மணி பிளான்ட் 6 இலைகளை கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம். 6 இலைகள் கொண்ட மணி பிளான்ட் அந்த தண்ணீருக்குள் போட்டு வைத்து விடுங்கள். இப்படி செய்தால் 3 மாதத்தில் கடன்கள் அகழுமாம். நீங்கள் மணி பிளான்ட் வைக்கும் அன்றைய நாள் சமையலறைக்கு ஒரு பூஜை செய்து விடுங்கள்.

money-plant1

சமையலறையில் கேஸ் இருப்பதால் ஜாக்கிரதையாக பூஜை செய்ய வேண்டும். ஒரு அடி தள்ளி இருந்து அடுப்பை சுற்றி தூபத்தை மட்டும் காண்பித்து விட்டால் போதும். சமையலறையை நீங்கள் எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ! அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் கடன் பிரச்சினைகள் தீரும். சமையலறையில் எப்பொழுதும் தண்ணீரை தேங்கி இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சிலரது அடுப்பிற்கு பின்னால் தண்ணீர் தேங்கி அப்படியே நிற்கும். அடுப்பு வைக்கும் மேடை சரியாக அமைக்கப்பட்டிருக்காது. இது போல் இருக்கும் வீடுகளில் நிச்சயம் கடன் தொல்லைகள் அதிகமாக இருக்கும். எனவே அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு செய்து கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே
ஆறுமுகனை நினைத்து, 6 வாரங்கள் இந்த மந்திரத்தை சொல்லி, இந்த தீபத்தை வீட்டிலிருந்தபடியே ஏற்றினால் போதும். சொந்த வீடு கட்டும் யோகம், உங்கள் வீடு தேடி வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.