உங்களுடைய வீட்டில் இந்த பொருட்களை எல்லாம், இப்படி வைத்திருந்தால் நிச்சயம் மன குழப்பம் வரத்தான் செய்யும். வீட்டில் இருக்கவே கூடாத அந்த 1 பொருள் என்ன?

charger

ஒருவருடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கும், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மன குழப்பம் ஏற்படுவதற்கும், அந்த வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களும் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. சில வீடுகளில் எல்லாம் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இருக்காது. வீட்டில் எவ்வளவு பூஜைகள் செய்தாலும், எவ்வளவு ஹோமங்கள் நடத்தினாலும் எவ்வளவு பரிகாரங்களை செய்தாலும், பிரச்சினைக்கான தீர்வை மட்டும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. உங்களுடைய வீட்டிலும் தீராத பிரச்சனை, தீராத மன குழப்பம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் இந்தப் பொருட்களையெல்லாம் வீட்டிலிருந்து அகற்றி தான் பாருங்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கான பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்கும்.

broom-thudaippam1

பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கெட்ட பழக்கம் இது. என்னவென்றால் வீட்டில் ஆங்காங்கே வீடு கூட்டும் துடைப்பத்தை போட்டு வைப்பது. குளியலறையை சுத்தம் செய்ய ஒரு துடைப்பம், வெளியே வாசலை சுத்தம் செய்ய ஒரு துடைப்பம், வீட்டுக்குள் சுத்தம் செய்ய ஒரு துடைப்பம் ஒரு வீடு என்றால், இந்த மூன்று துடைப்பங்கள் தான் இருக்க வேண்டுமே தவிர, ஆங்காங்கே தேவைக்கு அதிகமாக துடைப்பத்தை போட்டு வைக்கக்கூடாது.

சில பேர் எல்லாம் வாசல் கூடவே இரண்டு துடைப்பத்தை பயன்படுத்துவார்கள். அந்த துடைப்பத்தை வீட்டு நில வாசற்படிக்கு உள்ளே நுழையும் போது, அப்படியே வீட்டிற்குள் நுழைபவர்கள் கண்ணில் படும்படி, போட்டு வைத்திருப்பார்கள் இது மிகப்பெரிய தவறு. இதைப்போல் உங்களுடைய வீட்டில் தேய்ந்த பழைய துடைப்பங்கள் இருந்தால், அதை உடனடியாக நெருப்பில் போட்டு எரித்து விடலாம் அல்லது ஒரு கேரிபேக்கில் போட்டு கட்டி குப்பை தொட்டியில் போட்டு விடலாம்.

kayaru

அடுத்தபடியாக அழகுக்கு என்று செயற்கையான முறையில் வாசனை இல்லாத பூக்களை உங்கள் வீட்டிற்குள்ளும் வைக்கக்கூடாது. வீட்டிற்கு வெளியேவும் வைக்கக்கூடாது. உங்களுடைய வாழ்க்கையும் வாசம் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக மிக மிக  முக்கியமான ஒரு பொருள் இது தான். இந்தப் பொருள் உங்க வீட்டில் இருந்தா உடனே வெளியே தூக்கி போட்டுவிட வேண்டும். உங்களுடைய வீட்டில் நிச்சயம் இருக்கவே கூடாது. பயன்படுத்தாத ஹெட்ஃபோன், பயன்படுத்தாத சார்ஜர், பயன்படுத்தாத எலக்ட்ரானிக் ஒயர்கள், இப்படியாக கயிறு வடிவத்தில் இருக்கும் எந்த ஒரு பொருளும் உங்களுடைய வீட்டில், இருக்கவே கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பொருளின் மூலம் உங்களுக்கு உபயோகம் இல்லை தெரிந்தால், பிறகு பயன்படும் என்று கூட அதை உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது.

head-phone

அதாவது நிறைய பேர் வீட்டில் கேட்காத ஹெட்போன் கலையும், பயனில்லாத சார்ஜர் கைகளையும் தூக்கி வெளியே போடவே மாட்டார்கள். பழுதடைந்த இந்த பொருட்களெல்லாம் நம்முடைய வீட்டிற்கு பெரிய கேடு விளைவிக்கும். தயவுசெய்து பயன்படுத்தாத எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருட்களை வீட்டிலிருந்து உடனே அகற்றிவிடுங்கள்.

charger1

தாம்பு கயிறு, சனல் கயிறு இப்படிப்பட்ட கயிறுகளை நிறைய வீட்டில் உருண்டை உருண்டையாக சுற்றி அப்படியே வைத்து இருப்பார்கள். அதற்கு பயன்பாடு இல்லாத பட்சத்தில் அது நம்முடைய வீட்டில் ஒரு ஓரமாக இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இது மிகவும் தவறு. கயிறு, ஒயர் எல்லாமே பாம்பு ரூபத்தில் இருக்கக்கூடிய ஒரு பொருள். ராகுவின் அம்சத்தைக் கொண்டு இருக்கும் இப்படிப்பட்ட பொருட்களை பயன்பாட்டிற்கு மட்டுமே நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

mahalakshmi3

பயன் இல்லாத பொருட்களை தயவுசெய்து வீட்டில் இருந்து அகற்ற பாருங்கள். உங்களை பிடித்த கஷ்டம், உங்களை பிடித்த பீடை, அனைத்தும் உங்களை விட்டு சென்று, உங்கள் கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்க கூடிய சீக்கிரமே ஒரு வழி கிடைக்கும் என்று கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.