வீட்டில் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து இருக்க அஷ்டலட்சுமி பூஜை

astalakshmi vetrilai
- Advertisement -

மனிதன் நிம்மதியாக வாழ பணம் தேவை தான். பணம் மட்டும் இருந்தால் நிம்மதியாக இருக்க முடியுமா என்றால் அது சந்தேகம் தான். பணத்துடன் சேர்த்து ஆரோக்கியம் சந்தோஷம் குழந்தை பாக்கியம் இப்படி சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். சகல ஐஸ்வர்யத்தையும் தருபவர்கள் அஷ்டலட்சுமிகள். பெரும்பாலும் செல்வம் வேண்டி மகாலட்சுமி பூஜை செய்பவரை அனைவரும் செய்வார்கள்.

வசதி படைத்த குடும்பத்தில் கூட பணம் இருக்கும் ஆனால் நிம்மதி இருக்காது. சில இடத்தில் குழந்தை செல்வம் இருக்காது. ஏதேனும் ஒரு வியாதியால் துன்பப்பட்டு கொண்டே இருப்பார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்காமல் தடைபட்டுக் கொண்டே இருக்கும். இப்படி எந்த விதமான தடைகளும் இல்லாமல் குடும்பம் சந்தோஷமாக இருக்க அஷ்டலட்சுமிகளை பூஜை செய்ய வேண்டும். அந்த பூஜை எப்படி செய்வது என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

அனைத்து செல்வத்தையும் பெற அஷ்டலட்சுமி பூஜை செய்யும் முறை

இந்த பூஜையை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். பொதுவாக வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள். ஆனால் இந்த அஷ்டலட்சுமி பூஜை நீங்கள் உங்களுக்கு உகந்த நாள் எதுவோ அன்றே செய்யலாம் தவறு ஒன்றும் இல்லை.

இந்த பூஜை செய்வதற்கு 9 வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக அலசி மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் முதலில் தாயாரை நினைத்து ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய தாம்பளத் தட்டில் ஒரு வெற்றிலையை எடுத்து தாம்பாளத்தில் வைத்து மஞ்சளில் விநாயகரை பிடித்து அதில் ஒரு பூவை வைத்து விடுங்கள். தாயாருக்கு நெய்வேத்தியமாக பஞ்சாமிர்தத்தை தயார் செய்து வையுங்கள்.

- Advertisement -

அடுத்து விநாயகருக்கு முன்பாக மீதமிருக்கும் எட்டு வெற்றிலையும் வரிசையாக வைத்து விடுங்கள். வீட்டில் மகாலட்சுமி தாயார் படம் இருந்தால் அதை எடுத்து விநாயகருக்கு அருகில் வைத்து படத்திற்கும் மலர் சூடி விடுங்கள். நல்ல வாசனை மிக்க ஊதுபத்திகளை ஏற்றி வைத்த பிறகு நல்ல தரமான குங்குமத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒவ்வொரு வெற்றிலையிலும் உங்கள் மோதிர விரல் கட்டைவிரலை பயன்படுத்தி கொஞ்சமாக குங்குமம் எடுத்து முதலில் இருக்கும் வெற்றிலையில் ஓம் தனலட்சுமி நமக என்ற ஸ்லோகத்தை 9 முறை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள். அடுத்த வெற்றிலையில் இதே போல கொஞ்சம் குங்குமத்தை கையில் எடுத்து ஓம் தானிய லக்ஷ்மி நமஹ என்று ஒன்பது முறை குங்குமத்தை போட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

இதே போல அஷ்டலட்சுமிகளையும் ஒவ்வொருவராக நினைத்து ஒவ்வொரு வெற்றிலையில் ஒன்பது முறை அந்தந்த லட்சுமி தாயாரின் பெயரை சொல்லி குங்கும அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீபராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அனைத்து சௌபாக்கியத்தை தரக் கூடிய இந்த அஷ்டலட்சுமி பூஜையும் வாரம் ஒரு முறையேனும் நம் இல்லத்தில் செய்யும் போது எந்த விதமான குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

இதையும் படிக்கலாமே அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்ட செய்ய வேண்டியது

பூஜைக்கு பயன்படுத்திய குங்குமத்தை தினமும் நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்ளலாம். மீதமிருக்கும் குங்குமத்தை வீட்டு நிலை வாசலில் பூசி விட்டால் மேலும் வீட்டிற்கு ஐஸ்வர்யங்கள் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சகல சௌபாக்கியத்தையும் கொடுக்கக் கூடிய இந்த அஷ்டலட்சுமி பூஜையை நீங்களும் செய்து சகல சௌபாக்கியத்துடன் வாழுங்கள்.

- Advertisement -