வாஸ்துப்படி வீட்டில் எந்தெந்த பொருட்கள் இருக்கக் கூடாது, வீட்டு மனை எப்படி இருக்க வேண்டும், சுவர்கள் எப்படி அமைய வேண்டும், இப்படி நம் முன்னோர்கள் வழங்கிய வாஸ்து குறிப்புகள் இதோ.

- Advertisement -

இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை, நியதி இருக்கின்றது. மொழி தெரியாத ஆதி மனிதர்களாக இருந்த நமது முன்னோர்கள் பெரும்பாலும் மலைக் குகைகளில் வாழ்ந்தனர். ஆனால் மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியதும், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல அற்புதமான ஆற்றல்களை கண்டறிந்து, அவற்றிற்கான சாஸ்திரங்களை வகுத்தனர். அத்தகைய சாஸ்திர விதிகளில் ஒன்று தான் வாஸ்து சாஸ்திரம். அந்த வாஸ்து சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய சில முதன்மையான விதிகளை குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக எந்த ஒரு வீட்டு மனையிலும் கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை எப்பொழுதும் காலியாகவே வைத்திருக்க வேண்டும். இந்த திசைகளை முழுதாக மறைக்கும் வகையில் கட்டிடங்களை கட்டக்கூடாது. நீங்கள் வசிக்கப் போகின்ற வீட்டின் தெரு எந்த திசையில் அமைந்திருந்தாலும், அதற்கு ஏற்றார் போல உங்கள் வீட்டின் நிலை வாசற்படியை தெருவை காட்டிலும்சற்று உயரத்தில் அமைக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் வசிக்கின்ற வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் இருக்கின்ற மதில் சுவர்கள் கட்டாயம் உங்கள் வீட்டு மனையின் எல்லைக்குட்பட்டு தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். இரண்டு வீட்டார்களுக்கான பொது சுவர் போன்று இந்த திசைகளில் மதில்சுவர் கட்டக்கூடாது. மேலும் வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கதவு மற்றும் ஜன்னல் கண்டிப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் வசிக்கப் போகின்ற வீட்டு மனையின் நில அமைப்பு நீளமாகவோ, சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவத்திலோ இருக்க வேண்டும். இந்த மூன்று அமைப்புகளில் இருக்கின்ற மனைகள் மட்டுமே வசிப்பதற்கு ஏற்றதாகும். தங்கள் வீடுகளில் மரம் வளர்க்க விரும்புபவர்கள் அந்த வீட்டு மனையின் தெற்கு, மேற்கு, தென் மேற்கு ஆகிய பகுதிகளில் வளர்க்கலாம்.

- Advertisement -

தவறான தெருக்குத்துக்கள் கோணல்மாணலாக வெட்டுப்பட்ட அமைப்பு கொண்ட வீடு மற்றும் மனைகளை வாங்குவது மற்றும் அவற்றில் வசிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற பழைய வீட்டை இடித்து, புதிதாக வீடு கட்டும் நிலையில் இருப்பவர்கள் பழைய வீட்டை இடிக்கும் பொழுது அந்த வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருந்து இடிக்க ஆரம்பிப்பது நல்லது.

வீட்டை அலங்காரம் செய்ய விரும்புபவர்கள் எக்காரணம் கொண்டும் வீட்டில் தாஜ்மஹால் மற்றும் குருச்சேத்திர கீதா உபதேச படங்களை மாட்டி வைக்கக் கூடாது. இந்த இரண்டையும் சிறிய அளவிலான சிலைகள் வடிவத்திலும் வீட்டிற்குள் வைத்திருக்கக் கூடாது. ஓடாத கைக்கடிகாரங்கள், துருப்பிடித்த பழைய இரும்பு பொருட்கள், அதிக முட்கள் நிறைந்த கள்ளி வகை செடிகள் போன்றவற்றை வீட்டிற்குள் வைத்திருக்கக்கூடாது. இத்தகைய பொருட்கள் வீட்டில் இருந்தால் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் வீண் விரயங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

பொதுவாக வீட்டின் தலை வாசல் சுவற்றின் இரண்டு பக்கமும் விளக்கு மாடங்கள் இருக்கவேண்டும். முற்காலத்தில் கட்டப்பட்ட ஓட்டு வீடுகளில் தலைவாசலின் இரண்டு பக்க சுவற்றிலும் இத்தகைய விளக்கு மாடங்களை வைத்து கட்டுவார்கள். ஆனால் தற்கால நகர்புற முறையிலான கட்டிடங்களில் இத்தகைய விளக்கு மாடங்களை வைத்து யாரும் கட்டுவதில்லை. இந்த விளக்கு மாடங்கள் தான் ஒரு வீட்டிற்கான கண்கள் எனவும், விளக்கு மாடங்கள் இல்லாத வீட்டை குருட்டு வீடு எனவும் நமது முன்னோர்கள் கருதினார்கள். ஆகையால், விளக்கு மாடம் இல்லாமல் ஏற்கனவே வீடு கட்டப்பட்டிருந்தால், ஸ்டாண்ட் வடிவில் இருக்கும் விளக்கு மாடங்களை கடைகளில் வாங்கி அதை உங்கள் வீட்டு தலை வாசலின் இரண்டு பக்கமும் அடித்து வைத்து அதில் விளக்கேற்றி வரலாம்.

- Advertisement -