காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சுவையான வெஜிடபிள் கட்லெட் செய்து கொண்டால் தட்டாமல் சாப்பிடுவார்கள்

cutlet
- Advertisement -

வெஜிடபிள் கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக  செய்வதற்கு ஏற்றது. வெஜிடபிள் கட்லெட் பல வகையான காய்கறிகளை கொண்டு செய்யப்படுகிறது உருளை கிழங்கு, பச்சைப்பட்டாணி, காலிபிளவர், பீன்ஸ், ப்ரோக்கலி, கேரட், ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர உங்கள் விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான வெஜிடபுள் கட்லட் நீங்களும் எளிமையான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  – 1, உப்பு – 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது  – 1 ஸ்பூன், மஞ்சள் தூள்  – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள்  – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 5, பச்சை பட்டாணி –  1/4 கப், துருவிய பீட்ரூட் – 1, துருவிய கேரட்  – 2, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2, கொத்தமல்லி இலைகள்  – சிறிதளவு, மைதா  – 4 ஸ்பூன், பிரெட் கிரம்  – 1/2 கப், எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கடாயில்  2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் அரை ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர் ஐந்து பீன்ஸ் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் கால் கப் பச்சை பட்டாணி, ஒரு துருவிய கேரட் மற்றும் ஒரு துருவிய பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

பின்னர் வேக வைத்து மசித்து வைத்துள்ள 2 உருளைக்கிழங்குகளை அதனுடன் சேர்த்து கலக்கவும்.நன்கு கலந்த பின்னர் எல்லா காய்கறிகளையும் சேர்த்து மசித்துக் கொள்ளவும். ஒரு கப்பில் நான்கு ஸ்பூன் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். காய்கறி கலவையை எடுத்து விருப்பப்பட்ட அளவில் உருட்டி தட்டிக் கொள்ளவும்.

அதனை மைதா கலவையில் முக்கி எடுத்து பின்னர்  பிரெட் கிரம்சில் பிரட்டி எடுக்கவும். மீண்டும் ஒருமுறை மைதாவில் முக்கி பிரெட் கிரம்சில் பிரட்டி எடுக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக  போட்டு பொரிக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பி போடவும். பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும். சுவையான கட்லட் தயாராகிவிட்டது.

- Advertisement -