சைவ கோலா உருண்டை ருசி மாறாமல் இப்படி ஈசியா செய்யலாம். மட்டன் கோலா உருண்டை சுவையில் அப்படியே இருக்கும்.

- Advertisement -

சைவ கோலா உருண்டை | Saiva kola urundai recipe in Tamil

மட்டன் எடுத்து கோலா உருண்டை செய்வதற்கு நேரமில்லை என்றாலும், சட்டுனு ஈசியா செய்யக்கூடிய இந்த சைவ கோலா உருண்டை செஞ்சு பார்க்கலாமே! அப்படியே கறி சுவையில் இருக்கக்கூடிய இந்த சைவ கோலா உருண்டை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்! ரொம்பவே சுலபமாக மட்டன் சுவையில் சைவ கோலா உருண்டை ரெசிபி எப்படி தயார் செய்வது? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

மீல் மேக்கர் – கால் கிலோ, சோம்பு – 4 டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, காஞ்ச மிளகாய் – 15, பொட்டுக்கடலை பொடி – இரண்டு டீஸ்பூன், நறுக்கிய கருவேப்பிலை – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – பொறிக்க.

- Advertisement -

செய்முறை

சைவ கோலா உருண்டை செய்வதற்கு மீல்மேக்கர் கால் கிலோ எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி நன்கு உப்பலாக ஊறி இருக்கும். இதிலிருந்து அதிக பட்சமாக இருக்கும் தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மூன்று டீஸ்பூன் மட்டும் சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் ஒரு ஸ்பூன் சோம்பு அப்புறம் சேர்க்கலாம்.

ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ் ஆன கருவேப்பிலை இலைகளை கழுவி அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் 15 லிருந்து 20 வரை காம்பு நீக்கி சேர்க்கலாம். பின்னர் மிக்ஸியை இயக்கி நன்கு கொரகொரப்பாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்து வாருங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை உருண்டை பிடித்தால் அழகாக பிடிக்க வரும். இதுதான் சரியான பதமாகும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மீதம் இருக்கும் சோம்பையும் சேர்த்து கலந்து விடுங்கள்.

- Advertisement -

மீல்மேக்கர் சுவையை டாமினேட் செய்ய ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் மட்டும் நறுக்கிய கருவேப்பிலை சேருங்கள். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கலந்து விடுங்கள். வேறு எந்த மசாலாவையும் நாம் சேர்க்கப் போவதில்லை. பின்னர் இதில் பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு எல்லாவும் ஒன்றோடு ஒன்று கலக்கும்படி பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா உருண்டைகளையும் தயார் செய்த பின்பு, அடுப்பை பற்ற வைத்து அதில் பொறிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். அடுப்பில் எண்ணெய் நன்கு காய்ந்ததும் மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உள்ளேயும் வெளியேயும் சரிசமமாக வெந்து வரும்.

இதையும் படிக்கலாமே:
ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும் பத்தே நிமிஷத்துல ரொம்ப சூப்பரான, கிறிஸ்பியான ஈவினிங் டீ டைம் ஸ்நாக்ஸ் ரெடி.

இப்போது எல்லா உருண்டைகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து ஐந்து நிமிடம் எல்லா புறமும் சிவக்க வறுத்து எடுத்து வையுங்கள். மேலே மொறுமொறுவென்றும், உள்ளே மிருதுவாகவும் நன்கு வெந்து வந்திருக்கும். இந்த சைவ கோலா உருண்டை சாப்பிடுவதற்கு ருசி மாறாமல் அப்படியே மட்டன் கோலா உருண்டை போலவே இருக்கும். கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -