நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இந்த சூப் செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதுமே! சூப்பர் வெஜிடபிள் சூப் ரெசிப்பிய மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

veg-soup-immune
- Advertisement -

சில பேருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். தும்பல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணம் நம்முடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் சுலபமான ஒரு ரெசிபியை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குளிர்காலத்திற்கு, மழைக்காலத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை குடித்தால் போதும் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.

choped-veg

4 பேர் குடிப்பதற்கு தேவையான வெஜிடபிள் சூப் செய்யும் அளவை தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் 2 சிறிய துண்டு இஞ்சியை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். 10 பல் பூண்டை தோலுரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த 2 பொருட்களையும் சிறிய உலக்கையில் போட்டு விழுது போல இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு நசுக்கும் உலக்கை இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக 1 டேபிள் ஸ்பூன் அளவு கான்பிளவர் மாவில், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். டீ குடிக்கும் டம்ளர் அளவு தண்ணீரைக் மாவில் ஊற்றிக் கரைத்தால் போதும்.

veg-soup

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அல்லது 1 ஸ்பூன் அளவு வெண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். இது சூடானதும், முதலில் நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், இப்படியாக உங்களுக்கு தேவைப்படும் காய்கறிகளை பொடியாக நறுக்கி போட்டு எண்ணெயில் ஒரு நிமிடம் வரை வதக்கி, 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். சூப்புக்கு தேவையான உப்பையும் இந்த இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் காய்கறிகளை வேக விடுங்கள். இந்த காய்கறிகளோடு மஸ்ரூம், காலிபிளவர் கூட சேர்த்து கொள்ளலாம் உங்கள் விருப்பம் தான்.

veg-soup1

காய்கறிகள் நன்றாக வெந்ததும் கலக்கி வைத்திருக்கும் கான்பிளவர் மாவை மீண்டும், ஒரு முறை கலக்கி விட்டு, சூப்பில் சேர்த்து விடுங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் சூப் கொதிக்க வேண்டும். இறக்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தேவையான அளவு, அதாவது உங்களுடைய காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூளை சேர்த்து, கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கி பரிமாறினால் சூப்பர் சூப் தயார்.

veg-soup

இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் அளவிற்கு காரம் குறைவாக தான் இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் தூக்கலாக இருக்கும். காய்ச்சல் வந்தவர்களுக்கு இந்த சூப் செய்து கொடுங்கள். வாய் கசப்பு நீங்கும். பசியும் எடுக்கும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் நாளைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! காய்ச்சல் வராது. சளி பிடிக்காது. இருமலும் வராது.

- Advertisement -