எண்ணையில் பால் சேர்த்து குளித்தால் முடி உதிர்வை தடுத்து விடலாம். என்ன! எண்ணையில் பாலை சேர்க்கனும்மா? ஆமாங்க பாலை இந்த முறையில் பயன்படுத்தி மட்டும் பாருங்க உங்க முடி எப்படி சர சரன்னு வளருதுன்னு.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனையை ஆரம்பத்திலே சரி செய்து விட்டால் தான் நல்லது இல்லை எனில் நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாவதுடன் புதிய முடிகள் வளராமல் தலையில் வழுக்கை விழும் அளவிற்கு போய் விடும். ஒரு சிலருக்கு முடி நீளமாக இருக்கும் ஆனால் மிகவும் மெலிதாக இருக்கும் அதற்கு மேல் அடர்த்தியாகவும் வராது இந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கான சரியான தீர்வாக இந்த எண்ணெய் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சிலருக்கு தலை வாரும் போதே கொத்து கொத்தாக முடி வந்தாலும் அல்லது உங்களுக்கு இயற்கையாகவே முடி மிகவும் மெல்லியதாக இருந்து அடர்த்தியே ஆகாமல் இருந்தாலும், முடி உதிர்ந்து அந்த இடத்தில் புதிய முடிகள் வளராமல் இருந்தாலும், இந்த ஆயில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கண்டிப்பாக முடி வளர்ந்து விடும்.

- Advertisement -

இந்த முடி உதிர்வுக்கு பிரச்சினை சரி செய்ய எடுத்துக் கொள்ளும் முக்கியமான பொருள் ஆளி விதை. இது முடி வளர்ச்சி தூண்டி முடி நீளமாக வளர பெரிதும் உதவி செய்யும். இத்துடன் கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, இவை அனைத்துமே முடி உதிர்வை தடுத்து முடியை நல்ல வலிமையாக்கி நீளமாக வளர வைக்க அந்தக் காலம் முதலில் பயன்படுத்தி வரும் பொருட்கள் தான். இப்போது இதை வைத்து எப்படி எண்ணெய் தயார் செய்வது என்று பார்க்கலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் 100 கிராம் ஆளி விதை ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 செம்பருத்தி இலை, 5 செம்பருத்தி பூ காம்பு நீக்கி சேர்த்து இதை அரைக்க தண்ணீருக்கு பதிலாக சுத்தமான பசும்பாலை கலந்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்து இந்த விழுதை ஒரு பிளாஸ்டிக் பேப்பர் எடுத்து அதில் சின்ன சின்ன வடகம் போல தட்டி ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்தவுடன் இது பிரவுன் நிறத்தில் வடகம் போலவே வந்து விடும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் காய வைத்த இந்த ஆளி விதையை ஒரு பத்து தட்டை அளவிற்கு எடுத்து எண்ணெயில் போட்டு விடுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணையை பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் சூடு படுத்துங்கள். சூடு படுத்தும் போது இதில் இருக்கும் சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கி எண்ணெய் நிறம் மாற வேண்டும் ஆனால் கருகி விடக் கூடாது.

எண்ணெய் காய்ந்தவுடன் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு  அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த எண்ணையை உங்கள் வேர்க்கால்களில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து விடுங்கள். தலையில் மசாஜ் செய்த பிறகு தான் முடியிலிருந்து அடிமுடி வரை எண்ணெய் தேய்க்க வேண்டும். இதைப் போல வாரத்துக்கு இரண்டு முறை செய்து வந்தால் ஒரு மாதத்திற்குள் உங்கள் முடி உதிர்வு பிரச்சினை சரியாகி அந்த இடத்தில் புதிய முடிகள் வளர தொடங்கி விடும். இந்த முறையில் நீங்களும் உங்கள் முடி உதிர்வு பிரச்சினை சரி செய்து கொள்ளுங்கள்

- Advertisement -