காய்கறிகளை இப்படி பக்குவமாக பார்த்து வாங்கி சமைத்து பாருங்கள். உங்கள் சமையல் எவரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலான சுவையில் இருக்கும்

vegetables
- Advertisement -

சமையல் செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று காய்கறிகள். காய்கறிகளை பார்த்து வாங்குவதர்கென்று தனி பக்குவம் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் பெண்களைவிட அதிகமாக ஆண்கள் தான் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வருகின்றனர். ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியாது அல்லவா காய்கறிகளை எப்படி பார்த்து வாங்குவதென்று. காய்கறி வாங்குவதை வெறும் வேலையாக மட்டும் நினைத்து செய்தால் போதாது. நாம் வாங்கி வரும் காய்கறிகள் நல்லதாக இல்லை என்றால் நாம் செய்யும் சமையலிலும் நல்ல சுவை இருக்காது. எனவே சமையலுக்கான காய்கறிகளை எப்படி பக்குவமாக பார்த்து வாங்க என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vegetables

பாகற்காய்:
பாகற்காயை பெரும்பாலும் உணவில் சேர்ப்பதை பலரும் தவிர்த்து வருகின்றனர். ஆனால் இந்த பாகற்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பல இருக்கின்றன. பாகற்காயை நாம் வாங்கும் பொழுது அது உப்பி பெரியதாக இருந்தால் அவற்றை வாங்குவதை தவிர்த்து விடவேண்டும். தட்டையாக இருக்கும் பாகற்காயை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை சமைத்தால் மட்டுமே சுவை நன்றாக இருக்கும்.

- Advertisement -

உருளைக்கிழங்கு:
அனைவர் வீட்டிலும் உருளைக்கிழங்கு பதார்த்தம் என்றால் மிகவும் பிடித்து சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது விரலால் அதன் மேல் தோலை கீறி பார்த்து வாங்க வேண்டும். அப்படி கீறும்பொழுது அதன் தோல் உரிந்தால் அது நல்ல உருளைக்கிழங்காக இருக்கும். ஆனால் அதன் தோல் உரியவில்லை என்றால் அவற்றை வாங்க கூடாது.

potato

கோவைக்காய்:
கோவைக்காய் வாங்கும் பொழுது அதன் நிறத்தை கவனமாக கவனிக்க வேண்டும். கோவைக்காயின் நிறம் முழுவதும் பச்சையாக இருக்க வேண்டும். அப்படி பச்சையாக இருந்தால் அது சமைப்பதற்கு நன்றாக இருக்கும். அவ்வாறு பச்சை நிறத்தில் இல்லாமல் அதன் மேற்புறத்தில் சிவப்பு வண்ணத் திட்டுகள் இருந்தால் அவற்றை வாங்குவதை தவிர்த்து விடலாம்.

- Advertisement -

முருங்கைக்காய்:
முருங்கைக்காயை வாங்கும் முன்னர் அதனை கையில் எடுத்து லேசாக முறுக்கி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது முருங்கைக்காய் வளைந்தது என்றால் அது சமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். அவ்வாறு வளையாமல் விரைப்பாக இருந்தது என்றால் முருங்கைக்காய் முற்றிவிட்டதாக இருக்கும்.

murungai

சேனைக்கிழங்கு:
சேனைக்கிழங்கை வாங்கும் முன்னர் பெரிய அளவில் இருப்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை இரண்டாக வெட்டிப் பார்த்து அதன் உள்பகுதி செம்பழுப்பு நிறத்தில் இருந்தால் அதனை தாராளமாக வாங்கிக்கொள்ளலாம்.

karunai-kilangu

கத்தரிக்காய்:
பெரும்பாலும் வீட்டில் சாம்பார் என்றாலே அதில் கத்தரிக்காய் தான் அதிக அதிகளவில் சேர்ப்பார்கள். கத்தரிக்காய் வாங்கும் பொழுது அதனை கையில் எடுத்து அழுத்திப் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது அது மிருதுவாக இருந்தால் அது இளசான நல்ல கத்தரிக்காயாகும். அவ்வாறு இல்லாமல் அழுத்தமாக இருந்ததென்றால் அவை முற்றிய கத்தரிக்காய். அதனை வாங்கி சமைத்தால் உங்கள் சமையலின் சுவையையே கெடுத்து விடும்.

brinjal

வெங்காயம்:
வெங்காயத்தை வாங்கும் பொழுது எப்பொழுதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதன் மேற்புறம் ஈரமாக இருந்ததென்றால் அதனை வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. அதேபோல் வெங்காயத்தின் நிறம் சற்று அடர்த்தியாக இருந்தால் அது நல்ல காரம் மிகுதியான வெங்காயமாக இருக்கும்.

- Advertisement -