வேலை இல்லையா? நல்ல வேலை வேண்டுமா? வேலையில் பிரச்சனையா? விநாயகருக்கு இந்த மாலையை சாற்றுங்கள். வேலை சம்பந்தப்பட்ட அனைத்து வேண்டுதல்களையும் அவர் நிறைவேற்றுவார்.

no job vinayagar
- Advertisement -

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். அதாவது அந்த காலத்தில் ஆண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. வேலைக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் தான் அவர்களுக்கு திருமணம் என்பதே நடக்கும். மேலும் மனைவியும், மனைவியின் குடும்பத்தாரும் மரியாதையுடன் நடத்துவார்கள் என்ற அர்த்தத்தில் தான் இந்த பழமொழியை கூறினார்கள். இந்த காலத்தில் அவ்வாறு கிடையாது. ஆண்களும், பெண்களும் சரிசமமாகவே வேலைக்கு செல்கிறார்கள். வேலை தேடுபவர்களும், வேலைக்கு செல்பவர்களும், தங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த போராட்டங்களில் இருந்து விடுபடுவதற்கு வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானை எந்த மாலையை அணிவித்து வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தன்னை எப்பொழுது நினைத்தாலும் ஓடிவந்து அருள் பாலிக்கக் கூடியவர் தான் விநாயகப் பெருமான். ஆதலாலேயே தான் அவர் அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். சாதாரண ஒரு புல்லை வைத்து வணங்கினாலும் நமக்கு பல நன்மைகளை தரக்கூடியவராக திகழ்கிறார். விநாயகருக்கு நாம் எண்ணில் அடங்காத மாலைகளை அணிவிப்போம். குறிப்பாக எருக்கம் பூ மாலை, அருகம்புல் மாலை, ரோஜா பூ மாலை, மல்லிகை பூ மாலை, தேங்காய் மாலை என்று பல மாலைகளை நாம் அணிவித்து இருப்போம். ஆனால் இந்த மாலையை அணிவிக்கும் பொழுது நம்முடைய வேலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று தொடங்க வேண்டும். அருகில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் விநாயகருக்கு நாம் ஒரு மாலையை அணிவிக்க வேண்டும். அந்த மாலை வாழைப்பழ மாலை. இந்த வாழைப்பழ மாலைக்கு நாம் கற்பூரவள்ளி பழத்தையோ அல்லது செவ்வாழைப்பழத்தையோ உபயோகப்படுத்தலாம். வேறு எந்த வகையான பழங்களையும் உபயோகப்படுத்தக் கூடாது. 9 பழங்களை எடுத்து அதை மாலையாக கட்ட வேண்டும். அந்த மாலையை விநாயகருக்கு சூட்டி, அர்ச்சனை செய்ய வேண்டும். கையில் சிறிது அருகம்புல்லை வைத்துக்கொண்டு, விநாயகரை 9 முறை வலம் வந்து அந்த அருகம்புல்லை அவரின் திருப்பாதங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்கும் பொழுது நம் வேலை தொடர்பான பிரச்சினையை அவரிடம் கூற வேண்டும். இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் மேற்கொள்ள வேண்டும். 12வது வாரம் விநாயகப் பெருமானுக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவருக்கு நெய்வேத்தியம் செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இந்த வழிபாட்டை வீட்டிலேயே மேற்கொள்ளலாமா என்று சில பேர் கேட்பீர்கள். வேலைக்காக கஷ்டப்படுபவர்கள் அந்த வேலை நிமிர்த்தமாக நமக்கு அருகில் இருக்கக்கூடிய விநாயகரை தேடிச் சென்று வழிபட தான் வேண்டும். அவரை நாடி செல்வோரை அவர் என்றும் கைவிடமாட்டார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பெண்களே, காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில் இந்த ஒரு பொருளை வையுங்க. சொந்த வீடு கட்டும் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும்.

எளிமையாக கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை மாலையாக தொடுத்து, அருகில் இருக்கக்கூடிய விநாயகருக்கு சாற்றி வழிபடுவதால், அவர் மனம் மகிழ்வடைந்து நம்முடைய வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வணங்குவோம்.

- Advertisement -