வெளிநாட்டில் சென்று பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்யக்கூடிய எளிய பரிகாரம் என்ன தெரியுமா?

aeroplane-velinadu-amman

எல்லோருக்குமே தன் சொந்த நாட்டை விட்டு விட்டு வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதில்லை. அதற்கான யோகமும் அவர்களிடம் நெருங்குவதில்லை. வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் வருவதற்கு கூட சந்திரன், ராகு சேர்க்கை தேவைப்படுகிறது. சந்திரனும், ராகுவும் சேரும் பொழுது ஒரு மனிதன் தன் நாட்டை விட்டு வெளியில் சென்று படிக்கவும் அல்லது பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அதில் ஏற்படும் தடைகள் நீங்க, இவர்களுக்கான எளிய பரிகாரம் தான் என்ன? அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

jathagam astro

வெளிநாடு செல்வதற்கான யோகம் உங்களுக்கு வந்து இருக்கிறதா? என்பதை முதலில் உங்களுடைய சுய ஜாதகத்தை வைத்து ஆராய வேண்டும். எல்லோருடைய கனவுகளும் பல நேரங்களில் பலிப்பதில்லை. வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற விடா முயற்சி இருந்தாலும் அதற்குரிய யோகமும் உங்களுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் வெளிநாடு செல்ல முடியும். நீங்கள் என்னதான் முயற்சி செய்து கொண்டிருந்தாலும் யோகம் இல்லை என்றால் வெளிநாடு செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று தான்.

குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இறைவனுடைய அருளும், அதிர்ஷ்டமான நேரமும் கைகூடி வர வேண்டும். இந்த யோகம் கைகூடி வருவதற்கு தான் சில எளிய பரிகாரத்தை செய்யலாம். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பது வேறு, ஆனால் அங்கேயே தங்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற குறிக்கோள் வேறு. ஆக இதற்கும், அதற்கும் வெவ்வேறு பரிகாரங்கள் உள்ளன.

aeroplane

முதலாவதாக வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்யலாம்? எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்றிருப்பவர்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையுடன் இருப்பார்கள். இதனால் தரமான கல்வி பெறுவதற்கு வெளிநாடு சென்று படிக்க வைப்பார்கள். அப்படி வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு அதில் தடை ஏற்படுகிறது என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு சென்று, அவருக்கு துளசி மாலை சாற்றி, பச்சை நிறத்தில் வஸ்திரம் வாங்கி கொடுக்க வேண்டும். மேலும் பெருமாள் கோவிலில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி வழிபாடு செய்யலாம். பெருமாள் கோவில் மட்டும் அல்ல ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றும் வெண்ணை காப்பு சாற்றி, வடை மாலை போட்டு வழிபாடுகள் செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் அமையும்.

அதே போல வெளிநாடு செல்வதற்கு மட்டுமல்லாமல், வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அம்பாளுக்கு அலங்காரம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். உங்கள் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு அலங்காரம் செய்யக்கூடிய பொருட்களை கேட்டு வாங்கி கொடுங்கள். அதுபோல் அம்பாள் கோவிலில் உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் செய்யும் பொழுது வெளிநாடு சென்று அங்கு நிரந்தரமாக பணத்தை சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.