- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇவ்வளவு செலவு பண்ணியும் கூட இந்த நரை முடி கருப்பாக மாற வில்லையே? என்று வருத்த...

இவ்வளவு செலவு பண்ணியும் கூட இந்த நரை முடி கருப்பாக மாற வில்லையே? என்று வருத்த படுகிறீர்களா?அப்படினா இந்த வெண்டைக்காய் குளியலை ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

- Advertisement -

தலைமுடி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வெள்ளை நிறமாக மாறுவது என்பது இயற்கை தான். ஆனாலும் வெள்ளை முடி வந்து விட்டால் ஏனோ ஒரு வித வருத்தம் ஏற்பட்டு சோர்ந்து விட தான் செய்கிறோம். இப்படி வரக்கூடிய இந்த வெள்ளை முடியை இன்னும் சில காலத்திற்கு வராமல் தள்ளி போடவும், ஒரு வேலை வந்து விட்டால் அதை கருமையாக மாற்றவும் இந்த முறையை பயன்படுத்தலாம்.நரை வந்தாலும் இதை தேய்த்தால் முடி கருமையாகத்தானே செய்கிறது பிறகு எதற்கு வருவதற்கு முன்பு போட வேண்டும் என்று யோசிப்பீர்கள். ஆனால் எதையுமே வருமுன் தடுப்பது சிறந்தது தானே. சரி இப்போது அதை எப்படி நரைமுடி வராமல் தடுக்கும் இந்த இந்த இயற்கை கிரீமை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

முடி கருமையாக மாறுவது என்பது நம் உடலில் இருக்கும் சத்து குறைபாடு தான் இத்தகைய மாற்றங்கள் தோன்றுகிறது கொஞ்சம் காலத்திற்கு முன்வெல்லாம் நரைமுடி என்பது ஐம்பது மேல் வயதுக்கு மேல் உள்ளவர்க்கு தான் தெரியவே செய்யும். ஆனால் இப்போது தான் சிறு பிள்ளைகளுக்கு கூட இந்த நரை முடி பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இந்த முறையில் நாம் பயன் படுத்தும் இந்த வெண்டைக்காய், முட்டை இவை அனைத்திலும் முடி கருமையாக வளர கூடிய அத்தனை சத்தும் இருக்கிறது.

- Advertisement -

அதற்கு முதலில் ஒரு மூன்று அல்லது நான்கு வெண்டைக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நல்ல சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இடி உரலில் போட்டு நன்றாக ஒரு பேஸ்ட் பதத்திற்கு இடித்து ஒரு சின்ன பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு முட்டையை உடைத்து இந்த வெண்டைக்காய் பேஸ்ட் உடன் சேர்த்து கலந்து விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் எந்த ஷாம்பாக இருந்தாலும் அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்த பிறகு கடைசியாக தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்த பிறகு உங்கள் தலைமுடியில் தேய்த்து ஒரு 20 நிமிடம் வரை அப்படியே இந்த பேஸ்ட் உங்கள் தலையில் இருக்கும் படி விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் ஷாம்பு சீயக்காய் எதை சேர்க்கவேண்டுமானாலும் போட்டு தலை குளித்து விடுங்கள்.

- Advertisement -

இந்த முறையை கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ந்து செய்து வந்து கொண்டே வந்தால் நரைமுடி வருவது தடுப்பதுடன், வந்த முடியும் கூட சீக்கிரத்தில் கருமையாக மாறி விடும். செயற்கையாக கிடைக்கும் இந்த டை வகைகளை உபயோகிப்பதை விட இயற்கையான முறையில் இது போல நாம் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நமக்கும் எந்த கெடுதலும் வராது. இதில் முக்கியமான ஒன்று பெரும் செலவுகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த மருதாணி, கோன், நெயில் பாலிஷ், எல்லாம் வாங்குற செலவே இனி இல்ல, எப்படின்னு யோசிக்கிறீங்களா? அதான் நாமே செய்ய போறோமே, வாங்க அது எப்படினு தெரிஞ்சுக்கலாம்.

நம் உடலை காத்துக் கொள்ள நாம் கொஞ்சம் நேரம் நமக்காக ஒதுக்குவது தவறு ஏதுமில்லை இந்த முறை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்குகே மாற்றம் தெரியும்.

சற்று முன்