கைகளில் மருதாணியும், விரல்களில் நெயில் பாலிஷ் வைப்பதும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். மருதாணியும் நெயில் பாலிஷும் எனக்கு பிடிக்காது என்று சொல்லும் பிள்ளைகள் ஏன் குழந்தைகள் கூட சொல்லாது. மருதாணி வைக்க வேண்டும் என்றால் இலையைப் பறித்து அரைத்து வைக்க வேண்டும். இப்போதெல்லாம் அதற்கு நேரம் கிடையாது அந்த இலையும் கிடைப்பதில்லை ரெடிமேட் கோன் கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி வைத்துக் கொள்கிறோம். ஆனால் அதை வைத்த ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தான் நன்றாக இருக்கும். அதற்கு அடுத்தடுத்த நாட்களில் நிறம் டல்லாகி போய் விடும். அது மட்டும் இன்றி அதில் கெமிக்கலும் கலந்து இருக்கும். இந்த முறையில் நீங்கள் இந்த மருதாணி லிகிவிட் தயாரித்து வைத்து கொள்ளுங்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
மருதாணி லிகிவிட் தயாரிக்க தேவையான பொருள்: சோம்பு – 2 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், டீத்தூள் – 2டீஸ்பூன், மைதா அல்லது கோதுமை மாவு -1 டீஸ்பூன். (ஒரு கிண்ணத்தில் சோம்பு, சக்கரை, டீத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள்)
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் உங்களின் சமையலுக்கு தேவை படாத ஏதாவது ஒரு பழைய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாத்திரத்தின் உள்ளே பொருந்தும்படி ஒரு பழைய சிறிய கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கிண்ணத்தை அந்தப் பாத்திரத்தில் நடுவில் சின்ன பாத்திரத்தை சுற்றிலும் நீங்கள் எடுத்து வைத்த அந்த சோம்பு, சர்க்கரை, டீ தூள், கலவையை நன்றாக போட்டு விடுங்கள்.
கிண்ணத்தில் இதை சேர்க்கக் கூடாது. கிண்ணம் தவிர கிண்ணத்தை சுற்றியுள்ள பகுதியில் போட்டு வைத்து விடுங்கள். இப்போது அடுப்பின் மேல் இருக்கும் இந்த பாத்திரத்தை ஒரு தட்டு வைத்து மூடி விட்டு, இதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை வைத்து விடுங்கள் போதும். ஒரு பத்து நிமிடம் வரை அப்படியே அடுப்பின் மீது இருக்கட்டும். இதில் உள்ள நீராவி மட்டும் நாம் நடுவில் வைத்திருக்கும் அந்த கிண்ணத்தில் இறங்கி இருக்கும்.
பத்து நிமிடம் கழித்து தண்ணீர் பாத்திரத்தை தனியாக வைத்து விட்டு உள்ளிருக்கும் கிண்ணத்தை பத்திரமாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். கிண்ணத்தை எடுக்கும் போது பத்திரமாக எடுக்க வேண்டும் பாத்திரம் சூடாக இருக்கும். இப்போது அடுப்பில் வைத்த அந்த பாத்திரத்ரத்தில் சாமான் தேய்க்கும் லிகிவிட் ஊற்றி ஊற வைத்து விடுங்கள் இல்லையென்றால் பிறகு தேய்க்க சிரமமாகிவிடும்.
இப்போது கிண்ணத்தில் இறங்கி இருக்கும் அந்த சாறை ஒரு டப்பாவில் ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படும்போது அந்த சாறில் இருந்து இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவிற்கு எடுத்தாலே போதும். அத்துடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு அல்லது கோதுமை மாவு எதையாவது சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குறைத்து உங்கள் விரல்களின் மேல் நெயில் பாலிஷ் போல தடவிக் கொள்ளுங்கள். நெயில் பாலிஷ் வைத்து அடுத்த நாளில் தோல் உறிந்து அசிங்கமாக மாறிவிடும். இது உங்களுக்கு இரண்டு மூன்று மாதம் வரை அந்த நிறம் அப்படியே இருக்கும் இதை மருதாணி போலவும் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு நல்ல ஒரு பட்ஸ் அல்லது கோன் டைப் எல்லாம் இப்போது கிடைக்கிறது அதில் ஊற்றி அழகான டிசைனிங் போட்டுக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: ஒரு துளி கூட பக்க விளைவு இல்லாமல், நரை முடியை கருப்பாக மாற்ற இந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளவும்.
இனி மருதாணி அரைக்க வேண்டிய வேலையும் இல்லை கோன் வாங்க வேண்டிய செலவும் இல்லை. பத்து நிமிடம் செலவு செய்தால் வீட்டிலே அருமையான நைல் பாலிஷ், மெஹந்தி செய்து கொள்ளலாம். இந்த லிக்விடை நீங்கள் ஃப்ரீசரில் வைத்தால் 3 அல்லது 4 மாதம் வரை கூட கெடாமல் அப்படியே இருக்கும்.