- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஎதை போட்டாலும் முடி வளரவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு, ஏத்த ஹேர் பேக்! இந்த பேக்கை 1...

எதை போட்டாலும் முடி வளரவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு, ஏத்த ஹேர் பேக்! இந்த பேக்கை 1 முறை போட்டால் 1 வருடத்திற்கு முடி கொட்டவே கொட்டாது.

- Advertisement -

எந்த ஹேர்பேக் போட்டாலும் சில பேருக்கு முடி உதிர்வு அடங்கவே அடங்காது. கொட்டிக் கொண்டே இருக்கும். என்னதான் சாப்பிட்டாலும் சில பேருக்கு முடி வளராது. முடி அடர்த்தியாகாது. இப்படிப்பட்ட முடி உதிர்வு பிரச்சனையை நினைத்து நினைத்து நிறைய பேர் ஏக்கமாக இருப்பார்கள். இதற்காக ஏதாவது தீர்வு கிடைக்காதா என்று தேடலில் இருப்பவர்களுக்கு ஒரு எளிமையான தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த எளிமையான குறிப்பை ஒரு வாரம், ஒரே ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். ரிசல்ட்டை கண்கூடாக காணலாம். பிறகு வாரம் ஒரு முறை இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி வர உங்களுடைய முடி வருட கணக்கில் கொட்டாமல் இருக்கும்.

முடி வளர புரோட்டின் சத்து நிறைந்த ஹேர்பேக்:
ஒரு சிறிய பவுலில் ஒரு கைப்பிடி அளவு உளுந்து போட்டு, ஒருமுறை தண்ணீரை ஊற்றி அலசி விட்டு, அதில் நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊறிய உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு, ஊற வைத்த தண்ணீரை ஊற்றி விழுது போல அரைத்து ஒரு பவுலில் மாட்டிக் கொள்ளுங்கள். அரைத்த இந்த உளுந்து மாவோடு 2 முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.

- Advertisement -

அவ்வளவு தான். டபுள் புரோட்டின் சத்து நிறைந்த ஹேர்பேக் தயார். உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெயை நன்றாக வைத்து, லேசாக மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு தயார் செய்து வைத்திருக்கும் ஹேர் பேக்கை, தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஹெர் பேக் நன்றாக காயட்டும். 20 நிமிடங்கள் தலையில் இருக்கட்டும். உங்களுக்கே தெரியும். தலை முடி அப்படியே ஸ்டிக்கியாக மாறி இருக்கும். அதன் பின்பு வழக்கம் போல நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

இந்த பேக்கை மட்டும் போட்டால் போதாது. உங்களுடைய உடம்பில் இரும்பு சத்து குறைபாடு இருக்கிறதா? என்று கொஞ்சம் கவனியுங்கள். வாரத்தில் இரண்டு நாள் முருங்கைக்கீரை சமைத்து சாப்பிடுங்கள். வேர்க்கடலை உருண்டை, பேரிச்சம் பழம், போன்ற பொருட்களை தினமும் இரண்டு என்ற கணக்கில் சாப்பிட்டு வர வேண்டும். இரும்பு சத்து குறைபாடு இருந்தால் அது சரியாகும். இது எதுவுமே செய்ய முடியவில்லை என்றால், முருங்கைக்கீரை பொடி விற்கின்றது அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் காலை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த முருங்கைக் கீரை இலை பொடியை போட்டு கலந்து குடித்து விடுங்கள். அவ்வளவுதான் உங்களுடைய முடி பிரச்சனைக்கு மூன்றே மாதத்தில் நல்லதொரு தீர்வை பார்க்க முடியும். மூன்று மாதத்தில், மூன்று மடங்கு முடி வளர்ச்சியை கண்கூடாக காண முடியும்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிஷத்தில் ஃபேசியல் செய்தது போல எஃபெக்ட் கிடைக்க வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்! அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

வாரத்தில் ஒரு நாள் புரோட்டின் சத்து நிறைந்த மேலே சொன்ன ஹேர் பேக்கை பின்பற்றி வாருங்கள். உங்களுடைய டயட்டில் மாற்றி மாற்றி இரும்பு சத்து நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த ஒரு ஹேர் பேக், பலவிதமான உணவுப் பொருட்களை சரியான முறையில் நாம் சாப்பிடும் போது முடி பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம். உங்களுக்கு மேலே சொன்ன அழகு குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்