இந்த 1 கயிறு உங்கள் கையில் இருந்தால் போதுமே! எந்த கெட்டதும் உங்களை நெருங்க முடியாது. பேய், பிசாசு, கண் திருஷ்டி, கெட்ட சக்தி எல்லாமே தெரித்து ஓடி விடும்.

kayaru

கண்திருஷ்டி, பேய், பிசாசு, பில்லி, சூனியம் இவைகளை நம்புபவர்கள் ஒரு விதம், இதெல்லாம் ஒன்றுமே கிடையாது, வெறும் கட்டுக்கதை என்று சொல்லுபவர்கள் ஒரு விதம். ஆனால், இப்படிப்பட்ட துஷ்ட சக்திகளை எல்லாம் நம்பாதவர்களுக்கு கூட, கஷ்டம் வரும் சமயத்தில் இவையெல்லாம் உண்மைதானோ என்ற சந்தேகம் ஓரத்தில் கட்டாயம் எழத்தான் செய்யும். ஆனால், விவாதம் செய்பவர்கள் கட்டாயம் இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த உலகத்தில் நல்ல சக்தி இருப்பது எத்தனை அளவிற்கு உண்மையோ, அதேபோல் கெட்ட சக்தியும் இருக்கிறது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்பாதவர்களுக்கு எதுவுமே இல்லை. நம்பிக்கை இல்லை என்றால், உங்களுக்கான பதிவு இது அல்ல. கண் திருஷ்டி படுகின்றது, நேரம் இல்லாத நேரத்தில் வெளியில் சென்று வருவதால், குழந்தைகள் பயப்படுகிறார்கள் அல்லது உங்களுக்கு, உங்களுடைய எதிரிகள் ஏதாவது செய்வினை செய்துவிட்டார்கள், என்ற பயம் இருந்தால் அதன் மூலம் தான் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் என்று தெரிந்தால், உங்கள் கையில் இந்த ஒரு கயிறை கட்டிக் கொள்ளுங்கள். உங்களிடம் எந்த எதிர்மறை ஆற்றலும் நெருங்காது. அந்த எதிர்மறை ஆற்றலுக்கு நீங்கள் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. கண் திருஷ்டி, பில்லி, சூனியம், பேய் பிசாசு, காத்து கருப்பு, எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால் எந்த எதிர்மறை ஆற்றல்களையும் இந்த கயிறு உங்களிடம் நெருங்க விடாது. அது எந்த கயிறு? அதை எப்படி கட்ட வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

இந்த கயிறு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனுடைய பெயர் வெள்ளெருக்கன் வேர் கயிறு. இந்தப் பெயரைச் சொல்லி நாட்டு மருந்து கடையில் இருந்து முந்தைய நாளே, வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்து உங்களது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

velleruku-kayaru

ஞாயிற்றுக்கிழமை காலை வேளையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, விநாயகரை மனதார வேண்டி, விநாயகரின் படத்தின் முன்பாக இந்த கயிறை வைத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்பு கையில் கயிறை எடுத்து கொள்ள வேண்டும். தாயத்து கயிறில் முடிச்சுப் போடுவார்கள் அல்லவா?

- Advertisement -

அதேபோல அந்த கையிரில் தொடர்ந்து 11 முடிச்சுகளை ஒரு இன்ச் இடைவெளி விட்டு விட்டு போட்டுக்கொள்ளுங்கள். இடைவெளிக்கு கணக்கெல்லாம் கிடையாது. ஒரு முடிச்சு தள்ளி இன்னொரு முடிச்சு. உங்களுடைய கயிறு எந்த அளவிற்கு நீளமாக இருக்கிறதோ அதில் 11 முடிச்சு வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

vinayaga

அந்த ஒவ்வொரு முடிச்சை போடும் போதும் ‘ஓம் வயநமசி’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே முடிச்சுப் போட வேண்டும், என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 11 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து முடிச்சைப் போட்டு அந்தக் கயிறை உங்களுக்கு வேண்டுமென்றாலும், உங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம். அல்லது உங்கள் குழந்தைகளுக்கு, உங்கள் கணவருக்கு உங்களது உறவினர்களுக்கு யாருக்கு வேண்டுமென்றாலும் அந்த கயிறு கட்டி விட்டு விடுங்கள்.

kayiru

நிச்சயம் கெட்ட சக்தி எதுவும் அவர்களை அண்டாது என்பதுதான் நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்களுக்காக, நம்பிக்கையோடு சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் செய்து பலனடையலாம் இந்த கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இந்த 1 செடியுடன் இதை மட்டும் சேர்த்து வைத்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.