வெள்ளிக்கிழமை இந்த நிறத்தில் ஆடை அணிந்து பாருங்கள். உங்கள் வாழ்வில் இது நாள்வரை நடக்காத நல்ல காரியங்கள் எல்லாம் கூட நடக்கத் தொடங்கும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே நம் நினைவிற்கு வருவது அந்த அம்மன் தான். மங்களகரமான நாள் என்றால் நம் நினைவிற்கு வருவது இந்த வெள்ளிக்கிழமை. வீட்டில் தினம்தோறும் விளக்கு ஏற்றாமல் கோவிலுக்கு செல்லாமல் இருக்கக்கூடிய பெண்கள் கூட,  வெள்ளிக்கிழமை என்று வந்துவிட்டால் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு மங்களகரமாக புடவை கட்டி, குங்குமம் இட்டுக்கொண்டு கோவிலுக்கு செல்வார்கள் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வார்கள். நம்முடைய வீடு மற்ற நாட்களில் எல்லாம் எப்படி இருக்கிறதோ தெரியாது. ஆனால் வெள்ளிக்கிழமை என்று வந்துவிட்டால் மணக்க மணக்க சாம்பிராணி வாசத்தோடு வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

இப்படிப்பட்ட இந்த வெள்ளிக்கிழமை அன்று எந்த நிறத்தில் ஆடையை உடுத்தினால் நல்லது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா. வெள்ளிக்கிழமை என்றாலே அது அம்பாளுக்கு உரியது. அம்பாளுக்கு உரிய பொருள் என்றால் அந்த பட்டியலில் முதலில் இருப்பது குங்குமம். குங்குமம் சிவப்பு சிவப்பு நிறம் அல்லது மெரூன் நிறத்தில் இருக்கும். வெள்ளிக்கிழமை நீங்கள் சிவப்பு நிற ஆடை உடுத்தினாலும் சரி அல்லது மெருன் கலர் கலந்திருக்கும் ஆடை உடுத்தினாலும் சரி, அதன் மூலம் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும்.

- Advertisement -

இது நாள் வரை வாழ்வில் எனக்கு எந்த ஒரு நல்ல காரியமும் நடக்கவே இல்லை என்பவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்துவிட்டு சிவப்பு நிறத்திலோ அல்லது மெரூன் நிறத்திலோ ஆடை அணிந்து கொண்டு நடக்காத நல்ல விஷயத்தை முயற்சி செய்யும் போது, அந்த காரியத்தில் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். நம் முயற்சி செய்யக் கூடிய காரியத்தில் வெற்றியானது நிச்சயம் நம் பக்கம்தான் நிற்கும் என்று ஆழ்மனதில் பதிய வைத்துக் கொண்டு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு தோல்வி என்பதே இருக்காது.

உங்களுடைய வீட்டில் மங்கள கரமான காரியம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறதா. வளர்பிறை வெள்ளிக்கிழமை ஒரு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், அல்லது பௌர்ணமி நாளில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சிவப்பு நிறத்தில் அழகான புடவை, சிவப்பு நிறத்தில் ஜொலிக்க கூடிய வளையல்கள், சிவப்பு நிற குங்குமம், அரளிப்பூ, அல்லது மல்லி பூ, வெற்றிலைபாக்கு மஞ்சள், இவைகளை எல்லாம் வாங்கி ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்து அம்மன் கோவிலுக்கு சென்று அந்த அம்பாளுக்கு இந்த பொருட்களை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அம்மனுக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை நாளில் அல்லது பௌர்ணமி நாளில் அபிஷேகம் செய்து வைத்து நீங்கள் வாங்கிக் கொடுத்த இந்த அலங்கார பொருட்களால், அம்மனுக்கு அலங்காரம் செய்து நீங்கள் வாங்கி சென்ற குங்குமத்தை அந்த கோவிலுக்கு வரும் பெண்களுக்கு கொடுத்தாலே போதும். உங்கள் வீட்டில் தடைபட்ட மங்கள காரியம் மீண்டும் சீக்கிரம் நடக்க தொடங்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பெண்களுக்கு மட்டும் இந்த பரிகாரம் என்பது இல்லை. ஆண்களும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். சிவப்பு வண்ணம் சேர்ந்த சட்டை அல்லது மெரூன் வண்ணம் கலந்த சட்டை இவைகளை போட்டுக் கொண்டு நடக்காது என்று சொன்ன காரியத்தை முயற்சி செய்து பாருங்களேன். வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று சொன்ன காரியங்கள் கூட ஏதாவது ஒரு ரூபத்தில் நல்லபடியாக நடந்து முடியும். பணம் விஷயத்தில் இருந்து மனம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வை தரக்கூடிய மேல் சொன்ன சின்ன சின்ன பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்துகொள்ளும்.

- Advertisement -