சில பரிகாரங்களை எல்லாம் நம்பிக்கையோடு, பக்தியோடு செய்தால் தான் பலன் தரும். ஆனால் ஒரு சில பரிகாரங்களை எல்லாம் போன போக்கில் விளையாட்டாக செய்து விட்டாலும் அதன் மூலம் நமக்கு பெரிய பெரிய பலன்கள் கிடைக்கும். அப்படிப்பட்ட எளிமையான சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எல்லோராலும் இந்த பரிகாரத்தை சுலபமாக செய்ய முடியும். எந்த ஒரு சிரமமும் இருக்காது. வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜையை பற்றிய தகவல் தான் இது. எல்லோரும் தான் வெள்ளிக்கிழமை பூஜை செய்கின்றோம் இதில் என்ன சிறப்பு என்று நினைக்காதீங்க. பதிவை தொடர்ந்து படித்து இந்த சின்ன விஷயத்தை தெரிந்து கொண்டாலே போதும் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய தானம்
பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் வெள்ளிக்கிழமை காலை நேரத்திலோ, மாலை நேரத்திலோ, மகாலட்சுமிக்கு பூஜை செய்யக்கூடிய வழக்கம் இருக்கும். பெருசாக இதற்கு சிரமம் இல்லை. பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு, புதுசாக பூக்களை போட்டு, விளக்கு ஏற்றி, ஊதுவத்தி ஏற்றி சின்னதாக பிரசாதம் செய்து வைத்து, கற்பூர ஆரத்தி காண்பிப்போம். இதுதான் பூஜை.
இந்த பூஜையில் பாசிப்பருப்பால் செய்யப்பட்ட பாயாசம் நெய்வேத்தியமாக வைக்கப்பட வேண்டும். உங்கள் சௌகரியம், எந்த அளவுக்கு பாயாசம் செய்கிறீர்களோ செஞ்சு வச்சுக்கோங்க. பூஜையை முடித்துவிட்டு 2 டம்ளரில் அந்த பாயாசத்தை ஊற்றி, உணவுக்காக கஷ்டப்படும் 2 பேருக்கு உங்கள் கையால் அந்த பொருளை தானம் கொடுத்து விடுங்கள். பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றால் கூட இரண்டு யாசகர்கள் கிடைப்பார்கள்.
அவர்களுக்கு இரண்டு பிளாஸ்டிக் டம்ளரில் இந்த பாயசத்தை ஊற்றி உங்கள் கையால் தானம் கொடுத்தாலே போதும். உங்கள் பண பிரச்சனையானது அன்றிலிருந்து குறைய தொடங்கிவிடும். குறைந்தது இரண்டு பேருக்கு தானம் செய்யவும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டும் என்றாலும் பாயசத்தை தானம் கொடுக்கலாம். இனிப்பு பிரசாதத்திற்கு மிகப்பெரிய சக்தி இருக்கு.
அதிலும் பாசிப்பருப்பில், வெல்லம் போட்டு நீங்கள் செய்யக்கூடிய தானம் சிறப்பான பலனை தரும். எப்போது இனிப்பு சாப்பிட்டாலும் அதை நீங்க மட்டுமே சாப்பிடக்கூடாது. உங்க பக்கத்தில் இருப்பவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்ற ஒரு பழக்கம் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தன ஆகர்ஷணம் ஏற்பட ஜாதிக்காய் பரிகாரம்
காரணம் இனிப்பு பொருளை பகிரும் போது நம்முடைய சந்தோஷம் இரட்டிப்பாகும். தினமும் ஒரு 1/2 ஸ்பூன் சர்க்கரையை எறும்புக்கு தானம் செய்தாலும் அந்த புண்ணியம் உங்களை தொடரும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெள்ளிக்கிழமை அன்று இந்த பாயாசத்தை தானம் செய்யுங்கள் மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை நம்பிக்கையோடு கடைபிடித்தால் நிச்சயம் உங்களுக்கு நன்மை நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.