வெள்ளிக் கொலுசை இதைவிட சுலபமாக, இதைவிட சீக்கிரமாக யாராலும் சுத்தம் செய்யவே முடியாது. வெறும் 1 பொருள் போதும். தண்ணிர் கூட தேவை இல்லை.

kolusu
- Advertisement -

நம்முடைய காலில் அணிந்திருக்கும் வெள்ளிக்கொலுசு சீக்கிரமே அழுக்கு படிந்த, கருநிறமாக மாறிவிடும். உடல் சூடு தன்மை உள்ளவர்களுக்கு, வெள்ளி கொலுசு  தூசு படியாமலே, இயற்கையாகவே கருத்துப் போய்விடும். வெள்ளிக் கொலுசை கடையில் கொடுத்து அடிக்கடி பாலிஷ் போடவும் முடியாது. திருப்பி திருப்பி புதியதாக மாற்றிக் கொண்டும் இருக்க முடியாது. அழுக்கு கொலுசை காலில் அணிந்து கொண்டால், அவ்வளவு அழகும் தராது. இதற்கு சுலபமான முறையில் ஒரு தீர்வு உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kolusu-leg

இந்த டிப்ஸ் எவ்ளோ சுலபம்னு தெரியுமா? நீங்க தண்ணீரில் போட்டு கழுவ கூட வேண்டாம். உங்களது கொலுசை இதை வைத்து துடைத்தால் போதும். கொலுசில் இருக்கும் அழுக்கு மொத்தமும் சுத்தமாக வெளியேறி, கொலுசு, புது கொலுசு போல பல பலனு மாறிடும். ரொம்ப சஸ்பென்ஸ் வைக்க வேணாம். அது என்ன பொருள் அதை எப்படி பயன்படுத்த போறோன்னு இப்பவே பார்த்திடலாம்.

- Advertisement -

நம் பல் தேய்க்கும் பல்பொடி தான் அது. பல் தேய்க்க கூடிய பல் பொடியில் எந்த வகை பொடியை வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வெண்மை நிறம் கொண்ட பல்பொடி ஆக இருந்தால் மிகவும் நல்லது. முடிந்தவரை கோல்கேட் பல்பொடி பயன்படுத்தி முயற்சி செய்து பாருங்கள்.

tooth-powder1

ஒரு டேபிள்ஸ்பூன் அளவு கோல்கேட் பல்பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். வெள்ளை நிற காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பல் பொடியை தொட்டு உங்களது கொலுசின் மேல் லேசாக தேய்த்து கொடுத்தாலே போதும். மொத்தமாக ஐந்து நிமிடங்கள் போதும் மொத்த கொலுசும் சுத்தமாக.

- Advertisement -

முன் பக்கம் பின் பக்கம் இரண்டு பக்கங்களிலும் பல்பொடி நன்றாகப் படும்படி தொட்டு தேய்க்க வேண்டியதுதான். வெள்ளை நிற காட்டன் துணியை தான் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மற்ற நிற காட்டன் துணியையும் பயன்படுத்தலாம். வெள்ளை நிற காட்டன் துணியில் துடைத்து எடுத்தால் அழுக்கு உங்கள் கண்களுக்கு நன்றாகப் புலப்படும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ளது.

thoothpowder

உங்களது கொலுசு அதிக அளவிலான வேலைப்பாடுகள் கொண்டிருந்தால், பல் தேய்க்கும் பிரஷ்ஷில் தொட்டு முதலில் கொலுசின் உள்பக்கத்தில் எல்லாம் பல்பொடி படும்படி, வைத்து விடுங்கள். அதன் பின்பு வெள்ளைத்துணியில் கொஞ்சமாக பல் பொடியைத் தொட்டு உங்கள் கையாலேயே மெல்ல மெல்ல தேய்த்து கொடுத்து பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே தெரியும். அப்படியே கொலுசு பாலிஷ் போட்டது போல் மாறத் தொடங்கும்.

- Advertisement -

velli vilaku

இந்த குறிப்பு கொலுசுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற வெள்ளி சாமான்களுக்கும் பயன்படுத்தலாம். உங்களது பூஜை அறையில் இருக்கும் வெள்ளி விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை சுத்தமாக கழுவி விட்டு, காய்ந்த துணியில் துடைத்து விட்டு, அதன் பின்பு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க சரியா வரும். ஒரு வாட்டி ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
புதினாக் கீரையில் மட்டுமல்ல இந்தக் கீரையில் துவையல் செய்தாலும் உடம்பில் பல பிரச்சனைகள் தீரும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -