இன்றைய நாளுக்கு உண்டான சிறப்பு அம்சங்கள் ஒன்றோ இரண்டோ? இன்று நவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கும் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை தரிசனமும், அதோடு மட்டுமல்லாமல் மாஹாளய பட்சம் அமாவாசை முடிந்து வந்து இருக்கும் மூன்றாம் பிறை தரிசனம், இன்று புரட்டாசியில் வந்திருக்கும் வெள்ளிக்கிழமை, ஆக மொத்தத்தில் இத்தனை சிறப்பு அம்சங்களும் கொண்ட இப்படி ஒரு வெள்ளிக்கிழமை நமக்கு மீண்டும் திரும்பாது. இந்த நாளில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல், செய்யக்கூடிய பரிகாரம் எல்லாம் நமக்கு இரட்டிப்பு மடங்கு அல்ல, 200 மடங்கு பலன் தரும் என்று சொல்லலாம்.
இன்று மூன்றாம் பிறை தரிசன பரிகாரம்
இன்று மாலை 6:10 மணி முதல் 6:40 மணிக்குள் சந்திர பகவானின் தரிசனம் உங்களுக்கு வானில் கிடைக்கும். மூன்றாம் பிறை நிலவு என்பது அந்த சிவபெருமான் தலையில் இருக்கும் பிறை நிலா. இன்றைய தினம் பிறை நிலவை பார்த்தவர்கள் சிவபெருமானை நேரில் தரிசனம் செய்த புண்ணியத்தை அடைய முடியும். சந்திர பகவானை பார்த்து உங்களுடைய வேண்டுதலை வைத்து ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் ஈசனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
முதலில் இந்த பிறை நிலவை தரிசனம் செய்து விடுங்கள். சந்திர பகவான் வானில் தெரியவில்லை, மேகமூட்டமாக இருக்கிறது என்றாலும் பரவாயில்லை. மேற்கு திசையை நோக்கி இந்த மந்திரத்தை சொல்லி பிறை நிலவை தரிசனம் செய்து கொள்ளுங்கள். பிறகுதான் பண வரவுக்கு உண்டான தாந்திரீக பரிகாரத்தை செய்ய வேண்டும். மூன்றாம் பிறையின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற்று இந்த பரிகாரத்தை செய்யும் போது பலன் பல மடங்காக கிடைக்கும்.
சந்திர பகவானை தரிசனம் செய்ய வெளியே செல்லும்போது கொஞ்சமாக பட்டை பொடியை உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள். சந்திர பகவானை தரிசனம் செய்துவிட்டு, வீட்டிற்குள் வரும் போது, உங்களுடைய உள்ளங்கைகளில் கொஞ்சமாக பட்டை பொடியை கொட்டி வீட்டிற்கு உள் பக்கமாக ஊதி விட வேண்டும்.
வீட்டிற்குள் பண வரவு அதிகரிக்க வேண்டும், பணம் எப்போதும் வீட்டிற்குள் வந்த வண்ணம் இருக்க வேண்டும் என்ற சொல்லிக்கொண்டே இந்த பட்டை பொடியை வீட்டிற்குள் ஊதி விடவும். பிறகு வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எளிமையான சந்திர மௌலிஸ்வரர் வழிபாடு, எளிமையான பணம் தரும் தாந்திரீக பரிகாரம், இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து நாளைய தினம் செய்யும்போது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
உங்கள் வீட்டில் பிரியாணிக்கு போடும் பட்டையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொண்டாலும் சரி, இல்லை பட்டை பொடி தனியாக கடைகளில் விற்கின்றது அதை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்தினாலும் சரி.
இதையும் படிக்கலாமே: நவராத்திரியில் வாங்க வேண்டிய பொருட்கள்
பட்டைக்கு பணத்தை ஈர்த்து தரும் ஆகர்ஷன சக்தி இருக்கிறது. உங்களுடைய வீட்டிற்குள் இந்த பட்டை பொடி எப்படி பறந்து வருகிறதோ அதேபோல பணமும் உங்கள் வீட்டிற்குள் தடையில்லாமல் பறந்து வரும் என்பது தான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் தாந்திரீகம். நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் வைத்த வேண்டுதல் பலிக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.