எவ்வளவு கருப்பான பழைய வெள்ளிப் பாத்திரங்களையும் பளபளன்னு புதியது போல மின்னச் செய்ய ஒரு கொட்டாங்குச்சி போதுமே!

silver-coconut-shell
- Advertisement -

வெள்ளியை பொறுத்தவரை வாங்கிய புதிதில் நல்ல வெள்ளை நிறத்தில் பளபளன்னு பளிச்சென மின்னும். ஆனால் சிறிது நாட்களிலேயே அதன் பளபளப்பு நீங்கி கறுமை படர்ந்து விடும். வெள்ளிப் பொருட்கள் கறுத்து போய்விட்டால் அதை சுத்தம் செய்வது ரொம்பவே கடினமாக இருக்கும் என்று பலரும் நினைப்பது உண்டு. குறிப்பாக வேலைப்பாடுகள் அதிகம் நிறைந்துள்ள வெள்ளி பொருட்கள் இது போல சுத்தம் செய்வதற்கு சற்று கஷ்டமாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கூட சிரமப்படாமல் ரொம்பவே சுலபமாக பத்து நிமிடத்திற்குள் வாங்கிய புதிதில் இருந்தது போல உங்களுடைய வெள்ளி பொருட்கள் பளபளக்க கொட்டாங்குச்சியை இப்படி செய்யுங்கள்.

நன்கு காய்ந்த ஒரு தேங்காய் சிரட்டை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் மூடியை கேஸ் அடுப்பில் வைத்து எரிய விட்டால் கொஞ்ச நேரத்திற்குள் தீப்பிடித்து கொட்டாங்குச்சி எரிய ஆரம்பித்துவிடும். அதை அப்படியே எடுத்து சாம்பிராணி போடும் ஸ்டாண்ட் அல்லது ஏதாவது ஒரு எவர்சில்வர் தட்டின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கொட்டாங்குச்சி முழுவதுமாக எரிந்து அதுவே உதிர்ந்து விடும். நெருப்பின் தனலில் எரிந்து கொண்டிருக்கும் இந்த கொட்டாங்குச்சி கரித் துண்டுகளின் மீது ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். இது சூட்டைத் தணிக்க நன்றாகவே உதவி செய்யும். இவை நன்கு ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கரித்துண்டு அவ்வளவு எளிதாக அரை படாது, எனவே ஓரளவுக்கு கொரகொரவென்று தான் இருக்கும் பரவாயில்லை.

பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது சோப்பு பவுடர், ஷாம்பூ என்று உங்களிடம் எது இருக்கிறதோ, அதை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் இந்த கலவையை எல்லா வெள்ளிப் பொருட்களின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும், வேலைப்பாடுகள் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் கைகளால் நன்கு தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களிலும் தேய்த்து 10 நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

சரியாக 10 நிமிடத்திற்கு பிறகு சாமான் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கிரப்பர் கொண்டு லேசாக நன்கு எல்லா இடங்களிலும் தேய்த்து எடுத்தால் போதும் வெள்ளிப் பொருட்களின் மீது படர்ந்துள்ள கருமை நீங்கி வெள்ளி பளபளன்னு புதியதாக வாங்கிய பொழுது எப்படி இருந்ததோ அதே போல மின்ன ஆரம்பிக்கும். வேலைப்பாடுகள் நிறைந்த இடத்தில் இருக்கும் கறுமையை போக்குவதற்கு பழைய டூத் பிரஷ் ஏதாவது இருந்தால் பயன்படுத்தி தேய்த்து விடுங்கள். ஸ்க்ரப்பர் அதற்கு சரிவராது.

வெள்ளிக் கிண்ணம், வெள்ளி ஸ்பூன், வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி பூஜை பொருட்கள், குங்குமச்சிமிழ், கொலுசு போன்ற எல்லா பொருட்களையும் இது போல கொட்டாங்குச்சியை எரித்து கிடைக்கும் சாம்பலில், எலுமிச்சையும், கொஞ்சம் சோப்பு தூளும் சேர்த்து தேய்த்தாலே போதும், வெள்ளியில் ஏற்பட்ட எப்பேற்பட்ட கறுமையும் எளிதாக நீங்கிவிடும். இதற்காக காசு கொடுத்து எதையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை! அது போல கைகளை அழுத்தம் கொடுத்து தேய்த்து கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை, நீங்களும் இதே மெத்தட்டில் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுடைய வெள்ளி பொருட்களும் பளபளன்னு மின்ன போகுது.

- Advertisement -