வெள்ளியங்கிரி மலை ரகசியம் மற்றும் சிவ பூஜை வீடியோ

Velliyangiri malai Sivan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
ஓம் நமசிவாய : வெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாக கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போலவும், வெள்ளி வார்ப்படத்தால் மூடி இருப்பது போலவும் காட்சி தருவதால் இது வெள்ளியங்கிரி என்று பெயர் பெற்றது. இங்குள்ள சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அழகிய மலையில் அற்புதமாக வீற்றிருக்கும் சிவனுக்கு நடக்கும் பூஜை குறித்த வீடியோ இதோ.

ஏழு சிகரங்களை கொண்ட வெள்ளியங்கிரி மலையானது 3500 அடி உயரம் கொண்டது. இம்மலையில் கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை போன்ற பல சுனைகள் உள்ளன. தென் கைலாயம் என்றும் என்று பக்தர்களால் இம்மலை அழைக்கப்படுகிறது. அதற்கு பின் ஒரு வரலாறும் இருக்கிறது. வாருங்கள் அது குறித்து பார்ப்போம்.

வெள்ளியங்கிரி மலை வரலாறு:

ஒரு பெண், மணந்தால் சிவனை தான் மணப்பேன் என்று உறுதி பூண்டு நிற்கிறாள். அதிலும் குறிப்பிட்ட நாளுக்குள் நான் சிவனை மணந்தே தீருவேன் என்கிறாள். அப்படி மணக்க முடியாமல் போனால் நான் என் உயிரையும் துறப்பேன் என்கிறாள். சிவபெருமானும் அவளது பக்தியை கண்டு அவளை நோக்கி வருகிறார். அவர் வரும் வழியில் அவருக்கு சில இன்னல்கள் நேருகிறது. இதனால் அவர் வர தாமதமாகிறது. இந்த நிலையில் அந்த பெண் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததால், நின்ற கோலத்தில் அவள் தன் உயிரை துறக்கிறாள். அவள் தான் கன்னியாகுமரி. இன்றும் அவளுக்கு கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velliyangiri malai

- Advertisement -

தன் பக்தையை காப்பாற்ற முடியாததால் மனமுடைந்த சிவன் தன் கவலைகளை குறைக்க ஒரு இடத்தை தேடுகிறார். அப்படி அவர் கண்டறிந்த இடம் தான் வெள்ளியங்கிரி மலை. விசனத்தோடு வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சிவன் அதன் உச்சியை அடைந்த பிறகு அங்கு அமர்கிறார். சிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

Velliyangiri malai

மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையில் மூன்று பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது. சித்தர்களும், யோகிகளும், முனிவர்களும் வாழ்ந்த ஒரு அற்புத மலை இது. இன்றும் இங்கு பல சித்தர்கள் சூட்சும வடிவில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. வெள்ளியங்கிரி மலை பயணம் நமக்கு ஆன்மீக உணர்வை அதிகரிப்பதோடு உடலில் புத்துணர்வும் பெருகுகிறது என்பதே உண்மை.

இதையும் பார்க்கலாமே:
101 வயதில் யோகா செய்யும் அற்புத மனிதர் வீடியோ

வெள்ளியங்கிரி மலை உச்சி வரை செல்ல இயலாதவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி நாதரை தரிசித்து செல்கின்றனர். வெள்ளியங்கிரி மலை யாத்திரை செல்ல நினைப்போர் பொதுவாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மலை ஏறுகின்றனர். அதன் பிறகு கடும் பணி, குளிர் போன்ற காரணத்தால் பலர் பயணத்தை தவிர்பதுண்டு. அதோடு மற்ற காலங்களில் விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இம்மலை சுமார் 3500 அடி உயரம் கொண்டதால் இம்மலை ஏறும் தூரம் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இம்மலையை ஏறுவது கடினம் என்றாலும் ஆறு சிகரங்களை கடந்து ஏழாவது மலையில் சுயம்பு வடிவில் வீற்றிருக்கு சிவனை தரிசிக்கும் சமயத்தில் துயரங்கள் அனைத்தும் பறந்தோடும்.

Velliyangiri malai is very famous hill in tamil nadu. It is called as then kailayam. Above we have described many things about Velliyangiri malai like Velliyangiri malai history/ varalaru, velliangiri malai trekking details, velliangiri malai temple secrets, velliangiri malai height and many other things about Velliyangiri malai.