ஒரு குழந்தை பிறப்பது முதல் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை பலவிதமான நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்று போராடுவோம். அந்த நன்மைகள் நடைபெறாத பட்சத்தில் அதற்குரிய வேண்டுதலையும் முன் வைப்போம். இந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கு ஒரே ஒரு பதிகம் நமக்கு உதவி செய்யும். அந்த பதிகம் தான் வேல்மாறல். வேல் மாறலை எந்த முறையில் எப்படி படித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேண்டுதலை நிறைவேற்றும் வேல்மாறல்
இன்றைய காலத்தில் ஆபத்து பாண்டவனாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை பலரும் பலவிதங்களில் வழிபாடு செய்கின்றனர். முருகப் பெருமானுக்கு உரிய பாடல்களை தினமும் பாராயணம் செய்வதும், முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும், அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்வது என்று பல விதங்களில் வழிபாடு செய்கின்றனர். முருகப் பெருமானுக்கு உகந்த வேல் மாறலை பாராயணம் செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பலன்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
வேல்மாறல் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு வெள்ளியால் ஆன சிறிய அளவில் இருக்கக் கூடிய வேலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வேலிற்கு பால், சந்தனம், தண்ணீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களை பயன்படுத்தி அர்ச்சனை செய்த வண்ணம் வேல் மாறலை படிக்க வேண்டும். இப்படி படிப்பதன் மூலம் நாம் வைக்கும் கோரிக்கைகள் நமக்கு நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இந்த வேல் மாறலை தினமும் படிக்கலாம், காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் தீபம் ஏற்றி வைத்து படிக்க வேண்டும். அப்படி தினமும் படிக்க இயலாது என்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை தோறும் படிக்கலாம். அப்படியும் படிக்க இயலாது என்பவர்கள் மாதத்தில் வரக்கூடிய சஷ்டி திதி அன்று வேல்மாறலை படிப்பது என்பது சிறப்பு.. இதில் எந்த நாளில் தங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதோ அந்த நாளை பயன்படுத்தி வேல் மாறலை படிக்கலாம்.
செவ்வாய்க்கிழமை தோறும் காலை 6 – 7 மணிக்குள் வேலிற்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் வேலிற்கு வேல்மாறலை படித்த வண்ணம் அர்ச்சனை செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குவார்கள். படிப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை படிப்பே வரவில்லை என்பவர்கள் கூட இப்படி தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை தோறும் வேல்மாறலை படித்து வர படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
சஷ்டி திதி அன்று வேல்மாறலை காலை 5 மணியிலிருந்து ஆறு மணிக்குள் படிப்பவர்களுக்கு திருமண தடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொடர்ச்சியாக ஐந்து சஷ்டிகள் இந்த வேல் மாறலை படிக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
தினமும் தொடர்ச்சியாக 48 நாட்கள் காலை ஆறு மணியிலிருந்து 7 மணிக்குள் வேல்மாறலை பாராயணம் செய்பவர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். வேலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று நினைப்பவர்கள் இந்த முறையில் பாராயணம் செய்ய கடின உழைப்பிற்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியில் இருந்து ஏழு மணிக்குள் இந்த வேல்மாறலை படிக்க வேண்டும். தொடர்ச்சியாக 7 நாட்கள் அதாவது ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை இந்த வேல்மாறலை படிப்பதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்டுவதற்குரிய யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
வேல் மாறலை படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் கண்டிப்பான முறையில் வெள்ளியினால் ஆன சிறிய வேல் என்பது வேண்டும். வேல்மாறல் படிக்கும் நாள்தோறும் பசும்பால், சந்தனம், தண்ணீர் இவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சிவப்பு நிற திரியை பயன்படுத்தி ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிற மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதே சமயம் “ஓம் நமோ சரவணபவாய நமஹ” என்னும் மந்திரத்தை 18 முறை உச்சரிக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக சஷ்டி திதி வழிபாடு
இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் நிதானமாக மேல்மாறலை படிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் நினைத்தது நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை தேர்வு செய்து கொள்கிறோம்.