இதுவரை நீங்கள் கேள்விப்படாத இந்த 1 பொருள் போதுமே உங்களது முக அழகை பாதுகாக்க! வெறும் 10 ரூபாயில், பலமடங்கு அழகை கொட்டிக் கொடுக்க போகும் அந்தப் பொருளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

face12

முக அழகிற்காக இதுவரை நாம் பயன்படுத்தாத ஒரு பொருளை, எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையாக கிடைக்கும் பொருள் தான் இது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய இந்த பொருளுக்கு சருமத்தில் உள்ள எல்லாப் பிரச்சனைகளையும் போக்கும் சக்தி உள்ளது. முகப் பரு, கொப்பளம், கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள் தோல் சம்பந்தப்பட்ட வியாதி, அரிப்பு, இப்படியாக சருமத்திற்கு எவையெல்லாம் பிரச்சினையாக இருக்கின்றதோ, அவை அனைத்தையும் ஒழிக்கக் கூடிய சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு. அழகுக்காக மட்டுமல்ல சில பேருக்கு சர்க்கரை நோயால் கூட காலில் கொப்பளம் புண் வெடிப்பு வந்து ஆறாமல் இருக்கும். அந்த இடத்தில் இதை தடவினாலும் அந்த காயம் சீக்கிரமே ஆறும். ரொம்பவும் சஸ்பென்ஸ் வைக்க வேண்டும். உடனடியாக அது என்ன பொருள் என்பதை பார்த்துவிடுவோம்.

kungalyam

நாட்டு மருந்து கடைகளில் விற்க கூடிய வெண்குங்கிலியம் தான் அந்தப் பொருள். இது சரும பிரச்சனையை நீக்குமா? நிச்சயம் நீக்கும். சருமத்தின் ஆழம் வரை சென்று சருமத்தில் உள்ள கெட்ட கிருமிகளை நீக்கக் கூடிய சக்தி இதற்கு அதிகமாகவே உள்ளது. இதை தினந்தோறும் நம்முடைய சருமத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும்.

நாட்டு மருந்து கடைகளில் வெண்குங்கிலியம் என்று கேட்டால் கொடுப்பார்கள். தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள். சாம்பிராணியில் கூட இந்த குங்கிலியம் கலந்திருக்கும். இந்த குங்குலியம் பார்ப்பதற்கு கற்கண்டு போல வெண்மை நிறத்தில் இருக்கும். சிலது பழுப்பு நிறத்தில் இருக்கும். நீங்கள் வெள்ளை நிற குங்கிலியம் வாங்கிக்கொள்ளுங்கள்.

cream

இதை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த இந்தப் பொடியை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். குங்கிலியம் பவுடர் தான் நமக்குத் தேவை. ஒரு சிறிய டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளரில் 2 – ஸ்பூன் அளவு குங்கிலியம் பவுடர், 2 – ஸ்பூன் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய், 2 – ஸ்பூன் அளவு தண்ணீர். எந்த ஸ்பூனில் குங்கிலியம் அளக்கப்படுகிறதோ, அதே சரியான அளவில் தேங்காய் எண்ணெயையும் சுத்தமான தண்ணீரையும் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு ஸ்பூனை வைத்து இந்த கலவையை முட்டையை அடிப்பது போல அடித்து கலக்க வேண்டும். இதை நன்றாக அடித்து கலக்கிய உடன் ஒரு வெண்ணை பதத்திற்கு நமக்கு கிடைக்கும். இதை கைபடாமல் அப்படியே ஒரு சிறிய பாட்டிலில் போட்டு, அழுத்தமாக மூடி, பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். 30 நாட்களில் இருந்து 50 நாட்கள் இதை நாம் பயன்படுத்தலாம். கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை.

face13

எப்படி பயன்படுத்துவது? இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு நான்கு சொட்டு அளவு இதைத் தொட்டு உங்களுடைய முகத்தில் ஆங்காங்கே வைத்து லேசாக தடவிக் கொள்ள வேண்டும். ஃபேரன் லவ்லி தடவுவது போல தான். மொத்தமாக எடுத்துக் பேக் போல போட்டு கொள்ளக் கூடாது. முகத்தில் இதை தடவிய உடன் உங்களது முகம் வெண்ணை தடவிய முகம் போல வழுவழுப்பாக தான் இருக்கும்.

face2

சிறிது நேரம் விட்டு விட்டீர்கள் என்றால் அது அப்படியே உலர்ந்து விடும். முகத்தில் போட்டதே தெரியாது. இரவு இதை தடவி தூங்கச் செல்ல வேண்டும். மறுநாள் காலை எப்போதும் போல உங்களது முகத்தை கழுவிக் கொள்ளலாம் தினமும் இதை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், உங்கள் முகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு 30 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும். இதைப் பயன்படுத்த தொடங்கிய 7 நாட்களில் வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

face5

எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இயற்கையான மருத்துவ குணம் கொண்ட இந்த குங்குலியத்தை எந்த சருமம் கொண்டவர்களும் பயன்படுத்தலாம். முகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் வாரத்தில் மூன்று நாட்கள் இதைப் பயன்படுத்தினால் முகம் மேலும் அழகு பெறும்.

face

முகத்தில் பயன்படுத்த இந்த க்ரீமை எடுக்கும்போது கைகளை தொட்டு எடுக்கக்கூடாது. ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து சிறிய கிண்ணத்தில் போட்டு அதை கையில் தொட்டுத்தான் முகத்தில் தடவ வேண்டும். இல்லை என்றால் இந்த கிரீம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.