கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனையை உடனடியாக நிறுத்த இந்த 1 பொடி போதும். ஒரே நாளில் ரிசல்ட்டை கண்கூடாக காணலாம்.

hair16
- Advertisement -

சில பேருக்கு கொத்து கொத்தாக முடி உதிர்வு இருக்கும். இப்படியே முடி கொட்டுவது தொடர்ந்தால் மூன்றே மாதங்களில் தலையில் வழுக்கை விழுந்து விடும் அளவிற்கு முடி உதிர்வு இருக்கும். இந்த பிரச்சனையை உடனடியாக தடுத்து நிறுத்த ஒரு சுலபமான குறிப்பைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முதல் காரணம் உடல் சூடு. உடல் சூடு அதிகமானால் முடி உதிரும். உடல் சூட்டை தணிக்க கூடிய, முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய, முடி உதிர்வை தடுத்து நிறுத்தக்கூடிய, பொருள் என்றால் அது வெந்தயம். வெந்தயத்தை அப்படியே பயன்படுத்தாமல் வெந்தைய பொடியை வைத்து இரண்டு குறிப்புகள் உங்களுக்காக இதோ

முதல் குறிப்பு:
இது வெந்தயப் பொடி ஹேர் பேக். இதற்கு நமக்கு நைசான வெந்தைய பொடி தேவை. உங்களால் வெந்தயத்தை வீட்டிலேயே மிக்ஸியில் பொடித்து அரைத்து சலித்து, வெந்தய பொடி தயார் செய்து கொள்ள முடியும் என்றாலும் அப்படி தயார் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் வெந்தைய பொடி கடைகளில் விற்கின்றது. அதை வாங்கி கூட குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கண்ணாடி டம்ளரில் வெந்தயம் பொடி 1 டேபிள் ஸ்பூன் போட்டு, அந்த டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் திக்காக கலந்து அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். (திக்காக என்றால் சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து வைக்க கூடாது. தண்ணீர் வெந்தய பொடியில் இருக்கத்தான் வேண்டும்.)

- Advertisement -

வெந்தய பொடி தண்ணீரில் கலக்கும் போது கொஞ்சம் கட்டி பிடிக்கும். அதனால் உங்கள் கையை வைத்துக் கூட அதை நசுக்கி விட்டு நன்றாக கலந்து வைக்கலாம். இரவு முழுவதும் அந்த தண்ணீரில் வெந்தய பொடி ஊற வேண்டும்.

எட்டு மணி நேரம் வெந்தய பொடி, தண்ணீரில் ஊறிய பின்பு கொழ கொழவென ஒரு ஜெல்லி பக்குவத்தில் நுரைத்து நமக்கு கிடைத்திருக்கும். இதை அப்படியே ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி பிழிந்து வடிகட்டி எடுத்தால் ஒரு ஜெல் போல லிக்விட் நமக்கு கிடைத்திருக்கும். இதை உங்களுடைய தலையில் ஸ்கேல்பில் நன்றாக வைத்து மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விட வேண்டும். அதன் பின்பு மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளலாம். வாரத்தில் ஒரு முறை இந்த பேக்கை முயற்சி செய்து வந்தால் முடி உதிர்வு உடனடியாக குறையும்.

- Advertisement -

இரண்டாவது குறிப்பு:
பொதுவாக நம்முடைய தலை முடிக்கு சீயக்காய் ஷாம்பூ இப்படிபட்ட பொருட்களை போட்டு தான் தலைக்கு குளிப்போம் அல்லவா. அதே போல வெந்தய பொடியை வைத்துக்கூட தலைக்கு குளிக்கலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு, நன்றாக கலந்து ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த தண்ணீரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெந்தய தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். இது பார்ப்பதற்கு சீயக்காய் தண்ணீர் போல தான் இருக்கும். இந்த வெந்தய தண்ணீரை நம்முடைய தலையில் போட்டு நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்வதென்றால் தலையை கசக்குவீர்கள் அல்லவா, அதேபோல கசக்கி அதன் பின்பு நன்றாக தண்ணீரை ஊற்றி அலசி குளிக்க வேண்டும். இப்படி செய்யும் போது ஷாம்பு சியக்காய் போட்டு மீண்டும் தலைக்கு குளிக்க கூடாது.

வாரத்தில் ஒரு நாள் இந்த வெந்தய பொடி தண்ணீரில் தலைக்கு குளித்தால் முடி உதிர்வு குறையும். முடி அடர்த்தியாக இரண்டு மடங்கு வளர தொடங்கி விடும். வெந்தய பொடியாக இருந்தாலும், நீங்கள் பேக்கை தயார் செய்து விட்டு வடிகட்டாமல் அப்படியே தலைக்கு போட்டால் தலையில் அந்த தூசி அப்படியே நிற்கும். அலசுவது ரொம்பவும் கடினமாக இருக்கும்.

ஆகவே வெந்தயத்தினை பயன்படுத்தி எந்த ஹேர் பேக்கை முயற்சி செய்தாலும் அதை வடிகட்டி தலைக்கு அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்போது தலையை அலசுவதற்கு பெரியதாக சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த இரண்டு குறிப்புகள் பிடித்திருந்தால் வாரத்தில் ஒரு நாள், ஒரு குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக தலைமுடி உதிர்வில் மாற்றம் தெரியும்.

- Advertisement -