நிறைய பேருக்கு முடி உதிர்வு இருக்கும். ஆனால் முடி உதிர்ந்த இடத்தில், புதியதாக முடி வளராது. இப்படியிருந்தால் காலப்போக்கில் தலையில் வழுக்கை விழத் தொடங்கிவிடும். முடியை அழகாக பின்னி கூட போட முடியாது. அந்த அளவிற்கு மெல்லிசாக போய்விடும். முடி உதிர்வை குறைக்க, குறிப்பாக ஸ்கால்ப்பில் அதிகப்படியான முடி வளர்ச்சியைத் தூண்ட, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சுலபமான ஹேர் பேக்கை தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம்.
இந்த ஹேர்பேக் தயார் செய்ய நமக்கு 3 பொருட்கள் தேவை. அலோ வேரா ஜெல், வெங்காய சாறு, வெந்தயப்பொடி. முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை ஓரளவுக்கு துண்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இயற்கையாகவே ஆலோவேரா கிடைத்தால் அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 1 டேபிள்ஸ்பூன் அளவு வெந்தயப்பொடி நமக்குத் தேவை. நாட்டு மருந்து கடைகளில் வெந்தய பொடி கிடைக்கும். அப்படி உங்களுக்கு பொடியாக வெந்தயம் கிடைக்கவில்லை என்றால் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளலாம்.
இப்போது நாம் எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்து விட்டோம். ஒரு பவுலில் வெங்காய சாறு 1/4 கப், ஆலுவேரா ஜெல் – 1/4 கப், வெந்தயப்பொடி – 1 டேபிள் ஸ்பூன், இந்த 3 பொருட்களையும் போட்டு உங்கள் கையை வைத்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். (உங்களுடைய முடியின் அளவுக்கு ஏற்ப இந்த மூன்று பொருட்களின் அளவை கூடவோ குறைத்தோ போட்டுக் கொள்ளலாம் தவறு ஒன்றும் கிடையாது.) நமக்கு தேவையான பேக் தயார். பேக்கை தலையில் போடுவதற்கு முன்பு உங்களுடைய தலையில் எண்ணெய் இருக்குதா பாத்துக்கோங்க.
முடியில் எண்ணெய் இருந்தால் பேக்கை அப்படியே அப்ளை செய்து கொள்ளலாம். எண்ணெய் இல்லை என்றால் தலையில் கொஞ்சம் எண்ணெயை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களுடைய ஸ்கால்ப்பில் முழுமையாக இந்த பேக்கை போட்டு விட வேண்டும்.
இந்த பேக் 20 நிமிடங்கள் வரை உங்களுடைய தலையில் நன்றாக ஊறட்டும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெந்தயப்பொடி சேர்த்திருப்பதால் தலையில் ஒட்டியிருக்கும் அந்தத் துகள்களை சுத்தமாக அலசவேண்டும். கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.
எல்லாம் சரி தான். இதில் சேர்த்திருக்கும் எல்லா பொருட்களுமே குளிர்ச்சியானவை. எனக்கு சளி பிடிக்கும். தலைபாரம் வரும். காய்ச்சல் வரும் என்றால் என்ன செய்வது. ஹேர் ஃபேகே 10 நிமிடங்கள் தலையில் வைத்துக் கொள்ளுங்கள் போதும். இதே போல மாதத்தில் ஒருநாள் ஹேர் பேக் போட்டால் போதும். எனக்கு ஜலதோஷம் பிடிக்காது என்பவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த பேக்கை பயன்படுத்தினால் போதும். மூன்றே மாதத்தில் உங்களுடைய ஸ்கால்ப்பில் குட்டி குட்டியாக முடி வளர்வதை நீங்களே பார்க்கலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா. ட்ரை பண்ணி பாருங்க.