உங்க முகம் நல்லா பளப்பளன்னு சைனிங்கா மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அழகாக மாற ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தா இப்படி பயன்படுத்துங்க.

bath power
- Advertisement -

வெந்தயம் சமையலுக்கு பயன்படும் பொருள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை வைத்து உடல் சூட்டை குறைக்கலாம் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். அது மட்டும் இன்றி தலைக்கு வெந்தயத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பதும் அறிந்திருப்போம். ஆனால் இதே வெந்தயத்தை வைத்து முகத்திற்கு போடும் போது முகம் பல மடங்கு அழகாக மாறும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வாங்க இந்த அழகு குறிப்பு பதிவில் வெந்தயத்தை வைத்து முகத்தை எப்படி அழகாக மாற்றுவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முக அழகிற்கு வெந்தயம்
முதலில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெந்தியம் ஊறியவுடன் இதை நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து முகத்தில் பேக் போல போட்டு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலப்பி விடுங்கள். இதனால் வெயிலில் ஏற்படும் சன்டேன் உடனே மறைந்து விடும்.

- Advertisement -

அடுத்து ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் காய்ச்சாத பாலை சேர்த்து நல்ல திக்கான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் பேக் போல போட்டு ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு 15 நிமிடம் வரை அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து விடுங்கள். இந்த பேக்கை தொடர்ந்து போடுவதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் ஓபன் போர்ஸ் அதாவது புள்ளிகள் போல் துளைகள் இருக்கும் அது எல்லாம் சரியாகி முகம் பளபளப்பாக சைனிங்காக மாறி விடும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் கொஞ்சமாக வெந்தயத்தை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை பவுடராக செய்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பவுலில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த வெந்திய பவுடர் இரண்டையும் சேர்த்து முகத்தில் பேக்காக போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கும். இதையும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

- Advertisement -

இதே போல் ஒரு ஸ்பூன் வெந்தய பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு வறுக்காத வெந்தய பவுடரை தான் எடுக்க வேண்டும். இத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்து வர முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், முகப்பரு வந்த தடங்கள் எல்லாம் மறைந்து முகம் பொலிவாகும்.

அடுத்து ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். அதன் பிறகு தண்ணீர் நன்றாக ஆறியதும் அதை வடிகட்டி உங்கள் முகத்தை தினமும் இந்த தண்ணீரில் சுத்தம் செய்து வர முகத்தில் இருக்கும் வறட்சித் தன்மை நீங்கி முகம் ஈரப்பதத்துடன் பார்க்க மிகவும் வசீகரமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கால் மூட்டு, கை மூட்டு ஆகிய இடங்களில் இருக்கும் விடாப்பிடியான கருமையை விரட்டியடிக்க இதை மட்டும் செய்து பாருங்கள் செம ரிசல்ட் கிடைக்கும்!

நான் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த ஒரு எளிய பொருளை வைத்து இத்தனை அழகு குறிப்புகள் செய்து கொள்ள முடியும். முகத்தை அழகாகவும் பளப்பளப்பாகவும், முகப்பரு, வறட்சி போன்றவை எதுவும் இல்லாத அழகை பெற தேவையில்லாத செலவுகளை செய்யாமல் இது போல எளிமையான முறைகளை பின்பற்றி பாருங்கள். உடல் அதிக குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் சைனஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இந்த வெந்தய பேக்கை தொடர்ந்து போடுவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -