கால் மூட்டு, கை மூட்டு ஆகிய இடங்களில் இருக்கும் விடாப்பிடியான கருமையை விரட்டியடிக்க இதை மட்டும் செய்து பாருங்கள் செம ரிசல்ட் கிடைக்கும்!

elbow-black-pumpkin
- Advertisement -

நம் உடலில் கை, கால் மூட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய எல்போக்கள் ரொம்பவும் மெல்லிய சருமத்தை கொண்டுள்ளது. அடிக்கடி அசைவினை உணரும் இந்த இடத்தில் சூரிய கதிர்வீச்சுகளால் விரைவாகவே செல்கள் இறந்து போகின்றன. இதனால் அந்த இடத்தில் மட்டும் தனியாக கொஞ்சம் கருமையை பார்க்க முடிகிறது. எல்லோருக்கும் இந்த கருமை இருக்கத்தான் செய்கிறது. இதில் இருந்து கருமையை எளிதாக விரட்டி அடிக்க என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு ரகசியங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கை, கால் மூட்டு பகுதிகளில் இருக்கக்கூடிய கருமை நாள்பட்டதாக இருக்கிறது. இதனை போக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல எனினும் இயலாத விஷயமும் கிடையாது. பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து இதற்காக தனியாக ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கக்கூடிய சாதாரண பொருட்களை வைத்து ரொம்ப எளிதாக இந்த கருமையை விரட்டி அடித்து விடலாம்.

- Advertisement -

மஞ்சள் பூசணிக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பூசணிக்காய் துண்டுகள் நான்கைந்து எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த விழுது இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பூசணிக்காய் விழுதுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயையும் சேர்த்து நன்கு விழுதாக கரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பூசணிக்காய் விழுதை கால் மூட்டு, கை மூட்டு மற்றும் விடாப்பிடியான கருமைப் படர்ந்துள்ள இடங்களில் நன்கு தடவி உலர விட்டு விட வேண்டும். பூசணிக்காயை இதுபோல் செய்து உலர விடும்பொழுது அது நன்கு ஒட்டிக் கொண்டு பசை போல் ஆகிவிடும். தோல் உரித்தால் எப்படி உறிந்து வருமோ, அதே போல உறிந்து வரும் வரை நீங்கள் காத்திருங்கள். 15லிருந்து 20 நிமிடத்திற்கு பிறகு நீங்கள் தோலை உரித்து எடுப்பது போல உரித்து எடுத்து விடுங்கள்.

- Advertisement -

தொடர்ந்து இது போல வாரம் மூன்று முறை செய்து பாருங்கள். மெல்ல மெல்ல கருமை நீங்கி உங்கள் சருமத்திற்கு ஒரு ஈவனான டோன் கிடைக்க பெறுவதை காண முடியும். மேலும் உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் இந்த கருமையை விரட்டியடிக்க கூடிய தன்மையை கொண்டுள்ளது. உருளைக்கிழங்கை ஜூஸ் ஆக எடுத்து மென்மையாக மூட்டுகளின் மீது மசாஜ் செய்து கொடுத்து நன்கு உலர விட்டுவிட வேண்டும். அதன் பிறகு துடைத்து எடுத்தால் இக்கருமை எளிதாக மறையும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே நாளில் பொடுகு நீங்கி தலைமுடி சுத்தமாக என்ன செய்ய வேண்டும்? இழந்த முடி வளர்ச்சியை மீண்டும் தூண்டிவிட இப்படி செய்யுங்கள்!

லெமனில் இருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் கூட ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆக செயல்படுகிறது. எனவே சிறிதளவு லெமன் ஜூஸை கருமை படர்ந்திருக்கும் மூட்டுகளில் மீது தடவி நன்கு உலர விட்டு துடைத்து எடுத்தால் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். பேக்கிங் சோடா பவுடரையும் நீங்கள் பாலில் குழைத்து இது போல தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை எளிதாக மறையும். கற்றாழையுடன் தேன் சேர்த்து இ துபோல மசாஜ் செய்யலாம். ஆலிவ் ஆயில் உடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து தடவி மசாஜ் செய்தாலும் இக்கருமை மெல்ல உதிரும்.

- Advertisement -