வெந்தயத்தை முகத்தில் இப்படி போட்டால் வயது ஏற ஏற உங்களுக்கு இளமை கூடிக்கொண்டே செல்லும்.

face4
- Advertisement -

வயது ஏற ஏற இளமை குறையத்தான் செய்யும். ஆனால் இந்த விட்டமின் E கிரீமை தினமும் முகத்தில் போட்டு வந்தால், உங்களுக்கு வயது ஏற ஏற இளமை கூடிக்கொண்டே செல்லும். அழகு மிளிரும். சிவப்பழகு கூடும். பார்ப்பதற்கு எப்போதுமே இளமையான தோற்றத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்றால் அதிகம் செலவு இல்லாத விட்டமின் ஈ க்ரீமை உங்களுடைய வீட்டில் இப்படி தயார் செய்து பயன்படுத்திப்பாருங்கள். வருடத்தில் 365 நாட்களும் மேக்கப் போடாமல் நீங்க மட்டும்தான் அழகா இருப்பீங்க.

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க நமக்கு மூன்று பொருட்கள் தேவை. வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1, மரச் செக்கு தேங்காயெண்ணெய் – 1 ஸ்பூன். (தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.) ஒரு டேபிள்ஸ்பூன் அளவு வெந்தயத்தில், மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி ஒரு இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு விடுங்கள். பகலில் ஊற வைப்பதாக இருந்தால் 9 லிருந்து 10 மணி நேரம் இந்த வெந்தயம் தண்ணீரில் நன்றாக ஊற வேண்டும்.

- Advertisement -

ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு ஊற வைத்த தண்ணீரைக் கொஞ்சமாக ஊற்றி விழுது போல அரைக்க வேண்டும். அப்போது நமக்கு புசுபுசுவென வெந்தய ஜெல் கிடைத்திருக்கும். இந்த ஜெல்லை வெந்தயத்தில் தான் அரைத்தீர்கள் என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு கிரீம் போல, விழுது போல அரைக்க வேண்டும். (ஒருமுறை வெந்தயத்தை அரைத்து அப்படியே 10 நிமிடங்கள் விட்டு விடுங்கள். மீண்டும் அரைத்த வெந்தய விழுதை மிக்ஸியில் போட்டு அரைக்கும் போது நமக்கு பேக் செய்ய மொழுமொழுவென வெந்தய பேஸ்ட் கிடைக்கும்.)

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த வெந்தய பேஸ்ட் 1 ஸ்பூன், ஒரே ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் இந்த வெந்தயம் விழுதோடு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி இதை நன்றாக அடித்து கலக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஏழு நாட்கள் வரை இந்த கிரீம் கெட்டுப் போகாது. இந்த கிரீமை தினம்தோறும் முகத்திற்கு பயன்படுத்தலாம். தயார் செய்து வைத்திருக்கும் இந்த க்ரீமை கொஞ்சமாக எடுத்து முகத்தில் அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் போல மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். ‌அவ்வளவு தான். தினமும் இதை மட்டும் செய்தால் போதும்.

பேக் போடுவது போல ரொம்பவும் திக்காக முகத்தில் இந்த ஜெல்லை போட வேண்டாம். சீரம் போல கண்ணுக்கே தெரியாமல் இந்த பேக்கை அப்ளை செய்யக்கூடாது. ஓரளவுக்கு மெல்லிசான லேயராக இந்த க்ரீமை முகத்தில் போட்டு மேல் சொன்ன முறையில் பயன்படுத்தி கொள்ளலாம். தினமும் இப்படி இந்த க்ரீமை பயன்படுத்தி வர உங்களுடைய முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கும். வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகம் பொலிவாகும். முகம் பளபளப்பாக மின்னும்.

ஒருவேளை உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின் ஆக இருந்தால், முகப்பரு நிறைய இருந்தால் இதில் எந்த எண்ணெய் சேர்க்க வேண்டாம். இரண்டு சொட்டு tea tree essential oil for face ஆயிலை எண்ணெய்க்கு பதிலாக சேர்த்து கலந்து பேக் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

முகப்பரு உள்ளவர்கள் பேக்கை முகத்தில் போட்டு அழுத்தம் கொடுத்து தேய்த்து மசாஜ் செய்யக்கூடாது. ஜென்டில் ஆக முகத்தில் அப்ளை செய்துவிட்டு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். முகப்பரு உள்ள இடத்தில் இந்த ஜெல்லை நன்றாக போட்டுக் கொள்ளுங்கள். முகப்பரு சீக்கிரத்தில் குறையும். தழும்புகள் சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

- Advertisement -