வேண்டியது நிறைவேற ஜபிக்க வேண்டிய மந்திரம்

mantra

“திக்கற்றவர்களுக்கு அந்த தெய்வமே துணை” என்று சொல்வார்கள். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சில இக்கட்டான சூழல்களில் பிற மனிதர்களின் உதவியை நாம் நாட வேண்டிய சூழல் சில சமயம் ஏற்படுகிறது. அப்படி நாம் எதிர்பார்க்கும் மனிதர்களின் உதவி கிட்டாத போது நாம் வணங்கும் இறைவன் தான் நமக்கிருக்கும் ஒரே துணை. அந்த இறைவனை வழிபட்டு பலன்களை பெற நாம் மந்திர ஜெபம் செய்கிறோம். அந்த மந்திர ஜெபம் சக்தி பெற்று இறைவனிடமிருந்து நாம் விரும்பிய பலன்களைப் பெறுவதற்கான அபிராமி அந்தாதி பாடல் இது.

Amman and siddhar

மந்திர பாடல் :
சென்னியது உன்பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம், சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின்னடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

“அபிராம பட்டரால்” அந்த அபிராமி அன்னையின் மீது இயற்றப்பட்ட இந்த பாடலை நீங்கள் உங்கள் விருப்பத்திற்குரிய கடவுளின் மந்திரத்தை கூறி அவரை பூஜித்த பிறகு, இம்மந்திரத்தை 9, 27 அல்லது அதற்கும் மேல் எவ்வளவு எண்ணிக்கையில் முடியுமோ அத்தனை முறை இம்மந்திரைப்படலைப் வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ பாடி வழிபடலாம். மேலும் அம்பிகைக்குரிய வெள்ளிக்கிழமைகளில் காலையில் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று, அந்த தெய்வத்துக்கு தீபாராதனை காட்டும் போது இப்பாடலை 9 முறை பாடி வழிபட நீங்கள் எந்த காரணத்திற்காக எந்த ஒரு தெய்வத்தை வழிபட்டாலும், அதற்கான பலன்களை முழுதும் பெற்று தரும்.

இதையும் படிக்கலாமே:
பிரிந்த உறவுகள் ஒன்று சேர துதி பாடல்

இது போன்ற மேலும் பல மந்திர பாடல்கள், தமிழ் மந்திரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அணைத்து தகவல்களையும் பெற எங்களோடு இணைந்திருங்கள்.