வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு இப்படி ஒரு முறை வேலவன் இடம் கூறுங்கள். அனைத்து வேண்டுதலையும் அந்த வேலவனே முன்நின்று நடத்தி காட்டுவார்.

murugan vel
- Advertisement -

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என்பது முருகனுக்குரிய அற்புதமான வாக்காகும். நாம் முருகனை முறையாக வணங்கினோம் என்றால் அவருடைய வேல் நம்மை வினைகளில் இருந்து காப்பாற்றும். மயில் நமக்கு பயம் ஏற்படும்பொழுது எல்லாம் அபய கரம் நீட்டும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருகனிடம் நாம் எவ்வாறு வேண்டுதல் வைத்தால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகனுக்கு என்று எத்தனை பெயர்கள் இருக்கின்றன. எத்தனை வழிபாட்டு முறை இருக்கின்றன. அத்தனைக்கும் அவர் செவி சாய்ப்பார் என்பதே உண்மை. இருப்பினும் அனைவராலும் முறைப்படி முருகனுக்கு விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்ள முடியாது அல்லவா? அவர்களின் உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் விரதத்தை கொஞ்சம் தளர்வு செய்யதான் வேண்டும். இந்த பதிவில் மிகவும் எளிமையான முறையில் எப்படி முருகனை வழிபட்டு நம்முடைய வேண்டுதலை பூர்த்தி செய்ய முடியும் என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

முருகனுக்கு உரிய கிழமையாக கருதப்படுவது செவ்வாய்க்கிழமை. இந்த வழிபாட்டை நாம் வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை செய்ய தொடங்கலாம் அல்லது கிருத்திகை, சஷ்டி போன்ற முருகனுக்குரிய விசேஷகரமான நாட்களில் இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்கலாம். இந்த வழிபாட்டிற்கு நம்மிடம் வேல் இருந்தால் மிகவும் சிறப்பு. அவ்வாறு வேல் இல்லாத பட்சத்தில் முருகனின் திரு உருவப்படத்தில் இருக்கும் வேலை வைத்தே நாம் வழிபாடு மேற்கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்ள போகும் நாளன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து செய்யக்கூடிய பூஜை வெற்றிகரமாக எந்த தடைகளும் இன்றி நடைபெற வேண்டும் என்று வேண்டிய பிறகு, முருகன் படத்தை பன்னீர் வைத்து துளைத்துக் கொள்ளுங்கள். வேல் இருப்பவர்கள் பன்னீரால் வேலிற்கு அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். முருகனுக்கு பிடித்த பூவான செவ்வரளி பூவை மாலையாக தொடுத்து சுட்ட வேண்டும்.

- Advertisement -

அவருக்கு பிடித்த பிரசாதமான பஞ்சாமிர்தத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு நாம் மிகவும் கடினப்பட வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் ஒரு வாழைப்பழம், இரண்டு பேரிச்சம்பழம், சிறிது நாட்டுச் சர்க்கரை, தேன் இவற்றைப் பிணைந்து வைத்தாலே பஞ்சாமிர்தம் தயாராகிவிடும். அல்லது அவருக்கு பிடித்த பாசிப்பருப்பு பாயாசத்தையும் வைத்தும் வழிபடலாம்.

முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு நெய் அகல் தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய நியாயமான வேண்டுதலை அவரிடம் கூற வேண்டும். பிறகு 108 முறை முருகா என்று கூற வேண்டும். பிறகு சுத்தமான சந்தனத்தை பன்னீர் ஊற்றி குழைத்து முருகனுடைய வேலின் கீழிருந்து அதாவது அடியில் ஒரு பொட்டு வைத்து அதன் மேல் குங்குமத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் தினமும் முருகா என்று 108 முறை கூறி சந்தன குங்குமம் வைத்து வேலின் நுனி வரை நாம் வைக்க வேண்டும். இப்படி நாம் வைத்த நியாயமான கோரிக்கையை அந்த வேலவனே முன் நின்று நடத்தி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது மிகவும் நன்மை பயக்கும்.

இதையும் படிக்கலாம்: அரசாங்க வேலை, பதவி உயர்வு சம்பள உயர்வு, அரசியலில் பெரிய செல்வாக்கு, என அடுக்கடுக்கான முன்னேற்றத்தைப் எளிதாக பெற இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டால் போதும்.

முருகனை முழு மனதோடு நம்பி அவரின் பாதங்களில் சரணாகதி அடைந்து இந்த வழிபாட்டை மேற்கொண்டு நம்முடைய நியாயமான வேண்டுதலை நிறைவேற்றி பலனடைவோம்.

- Advertisement -